முரசொலி (இலங்கை)
வகை | தினசரி |
---|---|
உரிமையாளர்(கள்) | சின்னதுரை திருச்செல்வம் |
மொழி | தமிழ் |
தலைமையகம் | யாழ்ப்பாணம், இலங்கை |
முரசொலி (Murasoli) இலங்கையில் வெளிவந்த ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை அதன் சுதந்திரமான செயல்பாட்டிற்காக பெயர் பெற்றதாகும். தமிழர்களைக் கலந்தாலோசிக்காத இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இது எதிர்த்தது. சின்னதுரை திருச்செல்வம் என்பவரால் முரசொலி பத்திரிகை நிறுவப்பட்டது. இந்திய அமைதி காக்கும் படையால் இவர் பலமுறை கைதுசெய்யப்பட்டார். இவரது மகன் அகிலன் திருச்செல்வம் இந்திய அமைதி காக்கும் படை ஆதரவு பெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் படுகொலை செய்யப்பட்டார். சின்னதுரை திருச்செல்வமும் அவரது மனைவியும் கொழும்பில் பாதுகாப்புக்காக இடம் விட்டு இடம் பெயர்ந்து தலைமறைவாகினர். இந்திய அமைதி காக்கும் படையால் முரசொலி மூடப்பட்டது. பத்திரிகையின் அனைத்து நகல்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பத்திரிகையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையின் அச்சு இயந்திரங்கள் 1987 ஆம் ஆண்டில் அழிக்கப்பட்டன.[1][2][3][4][5][6][7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gabriella Gamini , Vivek Chaudhary. "A RAW deal for Jaffna's journalists". Sage Journals. Retrieved 30 June 2021.
- ↑ "SRI LANKA amnesty international briefing" (PDF). Amnesty International. 1989. p. 16. Archived from the original (PDF) on 12 ஜூலை 2021. Retrieved 30 June 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The never say die spirit of Jaffna media". Sri Lanka Brief. 11 April 2013. Retrieved 29 June 2021.
- ↑ Avtar Singh Bhasin (2001). India-Sri Lanka Relations and Sri Lanka's Ethnic Conflict Documents, 1947–2000. Indian Research Press. p. 2154. ISBN 978-81-87943-18-1. Retrieved 30 June 2021.
- ↑ Rajesh Kadian (1990). India's Sri Lanka Fiasco: Peace Keepers at War. Vision Books. p. 37. ISBN 978-81-7094-063-0. Retrieved 30 June 2021.
- ↑ Mohan Ram (1989). Sri Lanka: The Fractured Island. Penguin Books. p. 19. ISBN 978-0-14-010938-2. Retrieved 30 June 2021.
- ↑ Apratim Mukarji (2000). The War in Sri Lanka: Unending Conflict?. Har-Anand Publications. p. 99. ISBN 978-81-241-0746-1. Retrieved 30 June 2021.
- ↑ Ramu Manivannan (1988). Shadows of a Long War: Indian Intervention in Sri Lanka. P. Kumar. p. 21. Retrieved 30 June 2021.