உள்ளடக்கத்துக்குச் செல்

முயாய் தாய் சாகசக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முயாய் தாய் சாகசக்குழு தாய்லாந்து திரைப்பட சண்டைக்காட்சிகளுக்காக பன்னா ரிட்டிக்ரையால் உருவாக்கப்பட்ட குழுவாகும். இக்குழுவின் அடிப்படை தற்காப்புக்கலை முயாய் தாய் என்பதால் இது அப்பெயர் பெற்றது.

வரலாறு

[தொகு]

பலய படங்கள்

[தொகு]

1979ல் தாய்லாந்து கொன்கேன் மாகணத்தில் 20 நபர்களைக் கொண்டு பன்னா ரிட்டிக்ரையால் இக்குழு உருவாக்கப்பட்டது. இவர்கள் 1989ல் வெளிவந்த பார்ன் டூ ஃபைட் திரைப்படத்தில் முதல்முதலில் சண்டைக்காட்சிகளில் ஈடுபட்டனர். 1980-90களில் இக்குழு 50க்கும் மேற்பட்ட குறுஞ்செலவு திரைப்பட சண்டைக்காட்சிகளில் ஈடுபட்டுருக்கின்றனர். 1990ல் இக்குழுவை அந்த குழுவைச் சேர்ந்தவர்களே கலைத்தனர்.

மீளுருவாக்கம்

[தொகு]

மீண்டும் 1999ல் பன்னா ரிட்டிக்ரையால் இக்குழு மீளுருவாக்கப்பட்டது. 2003ல் டோனி ஜா நடிப்பில் வெளிவந்த ஒங் பேக்(பெருஞ்செலவு) திரைப்படத்தில் இக்குழுவினர் மீண்டும் பணியாற்றினர்.

திறமைகள்

[தொகு]
2004ல் வெளிவந்த பார்ன் டூ ஃபைட் திரைப்படத்தில் இக்குழுவைச் சேர்ந்தவரின் கயறிலா சாகசம்

இக்குழுவில் இருந்து திரைப்பட சண்டைக்காட்சிகளில் ஈடுபடுபவர்கள் பின்வரும் கலைகளில் திறமை பெற்றிருப்பர்.

  1. கழைக் கூத்து (acrobatics)
  2. சீருடற்பயிற்சி (gymnastics)
  3. தற்காப்புக் கலைகள்
    1. மியோதாய்
    2. தாய்க்வண்டோ
    3. வூசூ
திரைப்படங்களில் இக்குழுவினரின் சிறப்புத்திறமைகள்
  1. சண்டைக்காட்சிகள் வடிவமைப்பு
  2. உயரத்தில் இருந்து கீழே குதிப்பது
  3. வாகனங்களில் போகும் போது சண்டையிடுவது
தனித்திறமை

இக்குழுவினரின் சண்டைக்காட்சிகளில் கயிறுகளின் உதவியில்லாமல் சண்டையிடுவர்.

உறுப்பினர்கள்

[தொகு]
  1. பன்னா ரிட்டிக்ரை - உருவக்கியவர்
  2. டோனி ஜா
  3. டான் சுபொங்
  4. மேலும் 20 உறுப்பினர்கள்

குறிப்புதவி

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முயாய்_தாய்_சாகசக்குழு&oldid=3371204" இலிருந்து மீள்விக்கப்பட்டது