முயல்-வாத்து தோற்றமயக்கம்
Appearance
முயல்-வாத்து தோற்றமயக்கம் என்பது, ஒரு முயலின் தலையையோ அல்லது ஒரு வாத்தின் தலையையோ காணத்தக்க வகையில் அமைந்த ஒர் இரட்டைப் பொருள் காட்டும் படம் ஆகும்.[1] இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகப் பழைய படம் 23 அக்டோபர் 1892 தேதியிட்ட "பிளீகென்டெ பிளட்டர்" (Fliegende Blätter) என்னும் செருமானிய நகைச்சுவைச் சஞ்சிகை ஒன்றின் வெளியானது. அப்படத்தின் கீழே "கூடிய அளவு ஒன்றுபோல் காணப்படும் விலங்குகள் எவை?" என்ற கேள்வியும், "முயலும் வாத்தும்" என்ற விடையும் இருந்ததன.[2] லுட்விக் விட்கென்சுட்டைன் என்பவர் தான் எழுதிய மெய்யியல் ஆய்வுகள் (Philosophical Investigations) என்னும் நூலில், இரண்டு வெவ்வேறு விதமான பார்த்தலை (அதைப் பார்த்தல்/ அதுவாகப் பார்த்தல்) விளக்குவதற்குப் பயன்படுத்தியதன் மூலம் இப்படத்தைப் புகழ் பெறச் செய்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Weisstein, Eric W., "முயல்-வாத்து தோற்றமயக்கம்", MathWorld.
- ↑ McManus, I. C.; Freegard, Matthew; Moore, James; Rawles, Richard (2010). "Science in the Making: Right Hand, Left Hand. II: The duck–rabbit figure". Laterality 15: 167. doi:10.1080/13576500802564266. http://www.ucl.ac.uk/medical-education/publications/Reprints2010/2010-Laterality-RightHandLeftHand-2.pdf. பார்த்த நாள்: 18 February 2012.