முயற்சித் தன்மை
தோற்றம்
முயற்சித் தன்மை (Effortfulness) என்பது உளவியலில், ஒரு செயலைச் செய்யும்போது ஒரு நபர் உணரும் அகநிலை சார்ந்த உழைப்பு அல்லது ஆற்றல் செலவிடலைக் குறிக்கிறது. குறிப்பாக, ஒரு செயலைச் செய்யத் தேவைப்படும் மன ஒருமுகப்படுத்துதலையும், அதற்குரிய ஆற்றலையும் இது உணர்த்துகிறது.
முக்கிய கூறுகள்
[தொகு]- அகநிலை அனுபவம்: நோயாளியொருவரோ, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவரோ, ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்ய எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை, அவரே வெளிப்படுத்துவது (Subjective Reporting) இதில் முக்கியமானது ஆகும்.
- அளவீடுகள்: நபர் ஒருவர் தெரிவிக்கும் 'முயற்சித் தன்மைக்கும்', அவரின் மூளை தனக்குள்ள காணும் தோற்றம் (Brain Imaging) போன்ற புறநிலை அளவீடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
- மருத்துவப் பயன்பாடு: இது மருத்துவத்திலும், உளவியலிலும் நோய் கண்டறிதலில் (Medical and Psychological Diagnosis) முக்கியமானதொரு, குறிகாட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.
- நினைவாற்றல் ஆய்வு: நினைவாற்றல் தொடர்பான உளவியல் பரிசோதனைகளில் இது ஒரு காரணியாகக் கருதப்படுகிறது.
முயற்சித் தன்மை கோட்பாடு
[தொகு]1960-களில் பேட்ரிக் ராபிட் (Patrick Michael Anthony Rabbitt[1]) என்பவர் வயதானவர்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டார். அந்த ஆய்வுகளில் கீழ்கண்டவைக் கண்டறியப் பட்டுள்ளன.
- வயதாகும்போது கேட்கும் திறன் குறைவதால், மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதற்கு அவர்கள் அதிக 'முயற்சி' எடுக்க வேண்டியுள்ளது.
- இவ்வாறு அதிகப்படியான கவனத்தையும் முயற்சியையும் செலுத்துவதால், அவர்கள் கேட்ட தகவல்களை நினைவில் வைத்துக்கொள்வது கடினமாகிறது. இதுவே 'முயற்சித் தன்மை கோட்பாடு' (Effortfulness Hypothesis[2]) என்று அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Patrick Michael Rabbit, educator psychologist". prabook. Retrieved 2 February 2026.
- ↑ "Relatively effortless listening promotes understanding and recall of medical instructions in older adults". frontiersin. Retrieved 2 February 2026.