மும்மெத்திலறுமெத்திலினீரமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2,2,4-மும்மெத்திலறுமெத்திலினீரமீன்
2,2,4-Trimethylhexamethylenediamine[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,2,4-டிரைமெத்தில்-1,6-எக்சேன்டையமீன்
இனங்காட்டிகள்
ChemSpider 69172
InChI
  • InChI=1S/C9H22N2/c1-8(4-5-10)6-9(2,3)7-11/h8H,4-7,10-11H2,1-3H3
    Key: JCUZDQXWVYNXHD-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • CC(CC(C)(C)CCN)CN
பண்புகள்
C9H22N2
வாய்ப்பாட்டு எடை 158.29 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references
2,4,4-மும்மெத்திலறுமெத்திலினீரமீன்
2,4,4-Trimethylhexamethylenediamine[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,4,4-டிரைமெத்தில்-1,6- எக்சேன்டையமீன்
இனங்காட்டிகள்
ChemSpider 83906 Y
InChI
  • InChI=1S/C9H22N2/c1-8(7-11)6-9(2,3)4-5-10/h8H,4-7,10-11H2,1-3H3
    Key: DPQHRXRAZHNGRU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • CC(CCN)CC(C)(C)CN
பண்புகள்
C9H22N2
வாய்ப்பாட்டு எடை 158.29 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மும்மெத்திலறுமெத்திலினீரமீன் (Trimethylhexamethylenediamine) என்பது C9H22N2 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மும்மெத்தில்-1,6-எக்சேனீரமீன் சேர்மத்தின் இரண்டு மாற்றியன்கள் கலந்த கலவையைக் குறிக்க மும்மெத்திலறுமெத்திலினீரமீன் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. டிஎம்டிடி எனப்படும் ஒருவகை நைலானில் இக்கலவை ஒற்றைப்படியாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஐசோபோரோன் எனப்படும் ஒருவகையான நிறைவுறா கீட்டோனில் இருந்து மும்மெத்திலறுமெத்திலினீரமீன் தயாரிக்கப்படுகிறது. முதலில் ஐசோபோரோன் ஐதரசனேற்றம் செய்யப்பட்டு மும்மெத்தில்வளையயெக்சனாலாக ஒடுக்கப்படுகிறது. இதனுடன் நைட்ரிக் அமிலம் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு மும்மெத்திலறுமெத்திலினீரமீன் தயாரிக்கப்படுகிறது. இவ்வினை, வளையயெக்சேனில் இருந்து அடிப்பிக் அமிலம் தயாரித்தல் போன்ற அதே தொகுப்பு வினையாகும். இருநைட்ரைல் வழியாக இந்த ஈரமிலமானது ஈரமீனாக மாற்றப்படுகிறது[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "TRIMETHYLHEXAMETHYLENEDIAMINE". chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 19 April 2015.
  2. U. Rohde-Liebenau (1995). "13.10 PA-TMDT". in Kohan, Melvin. Nylon Plastics Handbook. Munich: Hanser. பக். 570. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1569901899.