உள்ளடக்கத்துக்குச் செல்

மும்மெத்திலமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்மெத்திலமீன்[1]
Skeletal formula of trimethylamine with all implicit hydrogens shown
Ball and stick model of trimethylamine
Ball and stick model of trimethylamine
Spacefill model of trimethylamine
Spacefill model of trimethylamine
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
N,N-டைமெதில்மெதனமீன்
வேறு பெயர்கள்
(மும்மெதில்)அமீன் (மும்மெதிலமீன் என்ற பெயர் வழக்கொழிந்து விட்டது.)[2]
இனங்காட்டிகள்
75-50-3 Y
3DMet B00133
Beilstein Reference
956566
ChEBI CHEBI:18139 Y
ChEMBL ChEMBL439723 Y
ChemSpider 1114 Y
EC number 200-875-0
InChI
  • InChI=1S/C3H9N/c1-4(2)3/h1-3H3 Y
    Key: GETQZCLCWQTVFV-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00565 N
பப்கெம் 1146
வே.ந.வி.ப எண் PA0350000
  • CN(C)C
UNII LHH7G8O305 Y
UN number 1083
பண்புகள்
C3H9N
வாய்ப்பாட்டு எடை 59.11 g·mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
மணம் மீன் நாற்றமுடையது, அம்மோனியாவின் மணமுடையது
அடர்த்தி 670 கிகி மீ−3 (0 °செல்சியசில்)
627.0 கிகி மீ−3 (25 °செல்சியசில்)
உருகுநிலை −117.20 °C; −178.96 °F; 155.95 K
கொதிநிலை 3 முதல் 7 °C; 37 முதல் 44 °F; 276 முதல் 280 K
கலக்கும் தன்மையுடையது
மட. P 0.119
ஆவியமுக்கம் 188.7 கிலோபாசுகல் (20 °செல்சியசில்)[3]
95 μமோல் பாசுகல்−1 கிகி−1
காரத்தன்மை எண் (pKb) 4.19
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.612 டிபாய்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−24.5 to −23.0 கிலோஜூல் மோல்−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H220, H315, H318, H332, H335
P210, P261, P280, P305+351+338
தீப்பற்றும் வெப்பநிலை −7 °C (19 °F; 266 K)
Autoignition
temperature
190 °C (374 °F; 463 K)
வெடிபொருள் வரம்புகள் 2–11.6%
Lethal dose or concentration (LD, LC):
500 மிகி கிகி−1 (வாய்வழி, எலி)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[4]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 10 ppm (24 mg/m3) ST 15 ppm (36 mg/m3)[4]
உடனடி அபாயம்
N.D.[4]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மும்மெத்திலமீன் ( டி.எம்.ஏ ) என்பது N(CH3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும் . இது நிறமற்ற, நீர் உறிஞ்சும் திறனுடைய மற்றும் எரியக்கூடிய மூவிணைய அமீன் ஆகும். இது குறைவான செறிவுகளில் அடர்ந்த "மீன்" வாசனையையும் அதிக செறிவுகளில் அம்மோனியா போன்ற வாசனையையும் கொண்டுள்ளது. இது அறை வெப்பநிலையில் ஒரு வாயு ஆனால், பொதுவாக, அழுத்தப்பட்ட எரிவாயு உருளைகளில் அல்லது 40% நீரில் கரைக்கப்பட்ட கரைசலாக விற்கப்படுகிறது. மும்மெத்திலமீன் ஒரு நைட்ரசக் காரமாகும், மேலும், இதை எளிதில் புரோட்டானேற்றம் செய்து மும்மெத்திலம்மோனியம் நேரயனியாக மாற்ற முடியும். மும்மெத்திலம்மோனியம் குளோரைடு ஐதரோகுளோரிக் அமிலத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு நீர் உறிஞ்சும் தன்மையுள்ள நிறமற்ற திண்மமாகும். மும்மெத்திலமீன் ஒரு நல்ல கருக்வவர் வினைபொருள் ஆகும். மேலும் இந்த கருக்கவர் வினையே இச்சேர்மத்தின் பெரும்பாலான பயன்பாடுகளுக்கு அடிப்படையாகும்.

மும்மெதிலமீன் என்பது தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சிதைவின் போது உருவாகும் விளைபொருள்களில் ஒன்றாகும். மனிதர்களில், இது கோலின் மற்றும் கார்னிதின் போன்ற உணவு ஊட்டச்சத்துக்களிலிருந்து குடல் நுண்ணுயிரித்தொகுதியால் பிரத்தியேகமாக தொகுக்கப்படும் ஒரு சேர்மமாகும். மும்மெதிலமீனின் அதிக அளவு மீன் நெடிக் கூட்டறிகுறி நோயின் வளர்ச்சியுடன் தொடர்புடையது, இது மும்மெதிலமீனின் தீங்கு விளைவிக்கும், மீன் நாற்றத்திலிருந்து எழுகிறது. [5] [6] மும்மெதிலமீன் என்பது முக்கியமாக மீன் அழுகுதல், சில நோய்த்தொற்றுகள், வாய் துர்நாற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடைய துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமான சேர்மமாகும். மேலும், நுண்ணுயிரியால் தோன்றும் அல்குல் நோய் காரணமாக ஏற்படும் யோனி துர்நாற்றத்திற்கும் காரணமாக இருக்கலாம். இது அதிக அளவு கோலின் மற்றும் கார்னிதின் எடுத்துக்கொள்வதோடும் தொடர்புடையது.

உற்பத்தி

[தொகு]

மும்மெத்திலமீனானது ஒரு வினையூக்கியைப் பயன்படுத்தி அம்மோனியா மற்றும் மெத்தனால் ஆகியவற்றின் வேதிவினையால் தயாரிக்கப்படுகிறது: [7]

3 CH 3 OH + NH 3 → (CH 3 ) 3 N + 3 H 2 O.

இந்த வேதிவினை மற்ற மெத்திலமீன்களான, டைமெதிலமீன் (CH3)2 NH மற்றும் மெத்திலமன் CH3 NH2 ஆகியவற்றை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Merck Index, 11th Edition, 9625.
  2. Henri A Favre, Warren H Powell. "Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013". Royal Society of Chemistry. pp. P-62.2.2.1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டெம்பர் 2019.
  3. Swift, Elijah; Hochanadel, Helen Phillips (May 1945). "The Vapor Pressure of Trimethylamine from 0 to 40°". Journal of the American Chemical Society 67 (5): 880–881. doi:10.1021/ja01221a508. 
  4. 4.0 4.1 4.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0636". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  5. "Microbiology Meets Big Data: The Case of Gut Microbiota-Derived Trimethylamine". Annu. Rev. Microbiol. 69: 305–321. 2015. doi:10.1146/annurev-micro-091014-104422. பப்மெட்:26274026. https://archive.org/details/sim_annual-review-of-microbiology_2015_69/page/305. "we review literature on trimethylamine (TMA), a microbiota-generated metabolite linked to atherosclerosis development.". 
  6. "Archaea and the human gut: new beginning of an old story". World J. Gastroenterol. 20 (43): 16062–16078. November 2014. doi:10.3748/wjg.v20.i43.16062. பப்மெட்:25473158. "Trimethylamine is exclusively a microbiota-derived product of nutrients (lecithin, choline, TMAO, L-carnitine) from normal diet, from which seems originate two diseases, trimethylaminuria (or Fish-Odor Syndrome) and cardiovascular disease through the proatherogenic property of its oxidized liver-derived form.". 
  7. A. B. van Gysel, W. Musin "Methylamines" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH Verlag GmbH & Co. KGaA, Weinheim. எஆசு:10.1002/14356007.a16_535
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்மெத்திலமீன்&oldid=3923295" இலிருந்து மீள்விக்கப்பட்டது