மும்பை பொங்கல் விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மும்பை பொங்கல் விழா என்பது இந்திய ஒன்றியம், மகாராட்டிர மாநிலம், மும்பையில் மட்டுங்கா 90 அடி சாலையில் தமிழர்களால் நடத்துப்படும் பொங்கல் விழா ஆகும்.[1][2] இங்கு பொங்கல் நாளன்று ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரிசையாக ஒரே நேரத்தில் அதிகாலை ஆறு மணிக்கு பொங்கலிடத் துவங்கி பொங்கல் பொங்க வைத்து சூரியனுக்கு நன்றி தெரிவித்து குலவையிட்டு வழிபடுகின்றனர்.

இந்த கூட்டுப் பொங்கல் விழாவானது மும்பை தாராவி தமிழர்களால் முதன்முதலில் முன்னெடுக்கப்பட்டு 2004 இல் 50 குடும்பங்கள் மட்டுங்கா 90 அடி சாலையில் கூடி பொங்கலிட்டனர். அடுத்த ஆண்டு இது 1001 குடும்பங்களானது. 2015 ஆம் ஆண்டு 1500 குடும்பங்களாக அதிகரித்தது. பொங்கலன்று மட்டுங்கா சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் இருந்து காமராசர் பள்ளிவரை சுமார் 1.5 கிலோ மீட்டர் வரை நான்கு வரிசையில் பொங்கலிடப்படுகின்றது. பொங்கல் இட வரும் குடுபத்தினர் தமிழரின் பாரம்பரிய ஆடைகளான வேட்டி, புடவை, பாவாடை தாவணியோடு வரிசையாக பொங்கல் இடுகின்றனர். விழாவுக்கு தமிழர் குடும்பங்களில் இருந்து விழா குழுவினரால் வரி வசூலிக்கப்படுகின்றது. தமிழ் வணிகர்களும் பொங்கலுக்கு வேண்டிய பொருட்களை அன்பளிப்பாக தருகின்றனர். இதைப்பார்த்து மும்பையின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்களும் ஒன்று கூடி கூட்டாக பொங்கலிடத் துவங்கினர். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தாராவியில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் ! புகைப்படத் தொகுப்பு". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
  2. "மும்பையில் பொங்கல் விழா உற்சாக கொண்டாட்டம்". Dailythanthi.com. 2018-01-16. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
  3. சு. கோமதி விநாயகம், முத்தாலங்குறிச்சி காமராசு, இது மும்பை பொங்கல், கட்டுரை, தினகரன் பொங்கல் மலர் 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_பொங்கல்_விழா&oldid=3262987" இலிருந்து மீள்விக்கப்பட்டது