மும்பை பல்கலைக்கழக நூலகம்
Appearance
பல்கலைக்கழக நூலகம் University Library | |
---|---|
மும்பை பல்கலைக்கழக நூலகம் | |
1870 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படம், இராசாபாய் மணிக்கூண்டு, கோபுரத்தின் மேல் கட்டுமானத்தில் உள்ளது; இடதுபுறம் மும்பை பல்கலைக்கழக பட்டமளிப்பு மண்டபம் உள்ளது]] | |
அமைவிடம் | ஓவல் மைதானம் |
ஆள்கூற்றுகள் | 18°55′47″N 72°49′48″E / 18.929775°N 72.830027°E |
பரப்பளவு | மும்பை துறைமுகம் |
கட்டப்பட்டது | 1878 |
கட்டிடக்கலைஞர் | சர் சியார்ச்சு கில்பர்ட்டு இசுகாட்டு |
கட்டிட முறை | கோதிக்கு மறுமலர்ச்சி, வெனிசு கோதிக்கு |
மும்பை பல்கலைக்கழக நூலகம் (University Library, Mumbai) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஓவல் மைதானத்தைச் சுற்றியுள்ள விக்டோரியன் கட்டிட வளாகத்தின் ஒரு பகுதியாகும். இந்நூலகம் யுனெசுகோ உலக பாரம்பரிய தளமுமாகும்.[1] இந்நூலகம் 1869 மற்றும் 1878 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இராசாபாய் கடிகார கோபுரத்துடன் கட்டப்பட்டது. சர் சியார்ச்சு கில்பர்ட்டு இசுகாட்டு என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அவர் மும்பைக்கு வராமலேயே இலண்டனில் இருந்து பணியாற்றினார்.[2][3]
1869 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானம் முடிந்து 27 பிப்ரவரி 1880 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முறையாகத் திறக்கப்பட்டது.[4]
படக்காட்சியகம்
[தொகு]-
நூலகத்தின் கண்ணாடி
-
கட்டிடக்கலை பாணி வெனிசு கோதிக்கு மற்றும் புதுச் செவ்வியல் கலவை
-
நூலகத்தின் உட்புறம்
மேற்கோளகள்
[தொகு]- ↑ Wright, Colin. "Bombay University buildings". www.bl.uk. Archived from the original on 2017-09-23. பார்க்கப்பட்ட நாள் 2023-12-05.
- ↑ Wright, Colin. "Public Buildings, Bombay". www.bl.uk. Archived from the original on 2020-01-27. பார்க்கப்பட்ட நாள் 2023-12-05.
- ↑ "'Mumbai honoured to have Scott's designs'". Hindustan Times. 4 August 2011.
- ↑ Bhatt, Rakesh Kumar (1 January 1995). History and Development of Libraries in India. Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170995821 – via Google Books.