மும்பை நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மும்பை நேரம் (Bombay Time) என்பது 1884 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவில் நிறுவப்பட்ட இரண்டு நேர மண்டலங்களில் ஒன்றாகும். அமெரிக்காவில் உள்ள வாசிங்டன், டி. சி.யில் நடைபெற்ற அனைத்துலக நிலநெடுவரை மாநாட்டில் இந்நேர வலையம் நிறுவப்பட்டது. 90 ஆவது நெடுவரை கிழக்கை கொல்கத்தாவும் 75 ஆவது நெடுவரை கிழக்கை மும்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நெடுவரை மாநாடு இந்தியாவிற்காக இரண்டு நேர வலயங்களை வரையறுத்தது. கிரீன்விச் இடைநிலை நேரத்திற்கு நான்கு மணி 51 நிமிடங்கள் முன்னதாக இருக்குமாறு மும்பை நேரம் வரையறுக்கப்பட்டது.[1][2]

இந்திய சீர் நேரம் 1906 ஆம் ஆண்டு சனவரி 1 இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட காரணத்தால் மும்பை நேரத்தை இந்திய சீர் நேரமாக மாற்றுவது சிரமமாக இருந்தது. மும்பை நேர வலய மாற்றத்தின் போது, இந்திய சுதந்திர இயக்கத்தின் முக்கியமான சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகர் மீது ஒரு குண்டுவெடிப்பு வழக்கில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. அரசுக்கு எதிராக மக்கள் போராட்டமும் நிகழ்ந்து கொண்டிருந்ததால் பிரபல வழக்கறிஞர் பெரோசா மேத்தா இம்மாற்றத்திற்கு எதிராக வாதாடினார். மக்கள் நம்பிக்கையைப் பெறாமல் மும்பை நகராட்சி ஆணையம்< சிலநாட்களுக்கு நேரவலைய மாற்றம் செய்யவிடாமல் நிறுத்தி வைத்தார். பொது மக்களின் ஏகோபித்த எதிர்ப்பு காரணமாக அரசாங்கம் இம்மாற்றத்தை செயல்படுத்துவதை நிறுத்தியது. 1955 ஆம் ஆண்டு வரை மும்பை நேரமே பயன்பாட்டில் இருந்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian Time Zones (IST)". Greenwich Mean Time (GMT). பார்க்கப்பட்ட நாள் 2006-08-13.
  2. "Indian Time Zones (IST)". Project Gutenberg. International Conference Held at Washington for the Purpose of Fixing a Prime Meridian and a Universal Day. October, 1884 Protocols of the Proceedings. பார்க்கப்பட்ட நாள் 2006-08-13.
  3. "Bombay time". Mumbai-central.com. 2001-12-08. Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2006-08-13.

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_நேரம்&oldid=3568135" இலிருந்து மீள்விக்கப்பட்டது