மும்பை நாய் கலவரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்பை நாய் கலவரங்கள்
அமைவிடம்
காரணம்மும்பை காவல்துறையினர் தெருநாய்களை கொல்லுதல்
இலக்குகள்தெரு நாய்களைக் கொல்லுவதை நிறுத்தக்கோரி போராட்டம்
முறைகள்சமூக கீழ்ப்படியாமை, புறக்கணிப்பு, கலவரம்
முடிவுபலர் கைது செய்யப்பட்டனர், மும்பை நகரத்திற்கு வெளியே தெரு நாய்கள் இடம் மாற்றப்பட்டது
தரப்புகள்
பிரித்தானியப் படைகள் மற்றும் காவல்துறை
எண்ணிக்கை
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்
பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகள் மற்றும் நகர காவல்துறையினர்
உயிரிழப்புகள்
காயமுற்றோர்பலர்
கைதானோர்பலர்

1832ஆம் ஆண்டு மும்பை கலவரம் என்றும் அழைக்கப்படும் மும்பை நாய் கலவரம், பிரித்தானிய இந்தியாவின் மும்பை நகரத்தில் தெருநாய்களை மும்பை காவல்துறையினர் மொத்தமாக கொல்வதை எதிர்த்து பார்சி மக்கள் நடத்திய கலவரம் ஆகும். பார்சி மக்கள் பின்பற்றும் ஜோராஸ்ட்ரிய சமயத்தில் நாய்கள் புனிதமாகக் கருதப்படுகிறது.[1] பார்சி மக்கள் அதிகம் வாழ்ந்த மும்பை நகரத்தில் தெரு நாய்களை கொல்ல மும்பை மாகாண அரசின் காவல்துறை நடவடிக்கை எடுத்ததால் கலவரங்கள் ஏற்பட்டது. 1826ல் மும்பை நகரத்தின் 20,000 மக்கள் தொகையில் ஏறத்தாழ 10,000 பார்சிகள் வாழ்ந்தனர்.[1]

கலவரங்கள்[தொகு]

1832ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் கீழிருந்த மும்பை நகர நிர்வாகத்தின் காவல்துறை, பிரித்தானிய அதிகாரிகளுக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்ட தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். உரிமையாளர்கள் இல்லாத தெருநாய்களைக் கொல்ல அனுமதிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. கொல்லப்படும் ஒவ்வொரு நாய்க்கும் பரிசு வழங்கப்படும் என்று காவல்துறை முடிவு செய்தது. இதனால் நேர்மையற்ற அல்லது அதிக ஆர்வமுள்ள நாய் பிடிப்பவர்கள் தெரு நாய்களைக் கொன்றனர். மேலும் நாய் பிடிப்பவர்கள் வீடுகளுக்குள் புகுந்து தனியார் நாய்களையும் கொன்று விடுவதாகவும் மிரட்டினர்.

இச்செயல் நாயை புனிதமாக கருதும் பார்சி மக்களின் மனம் புண்பட்டது. பாம்பேயின் கோட்டைக்கு அருகில் நாய் பிடிப்பவர்களின் குழுவை பார்சி மக்களின் கூட்டம் தாக்கியது. பின்னர் நாய்க் கொலையை நிறுத்தக் கோரி நகரின் நீதிமன்றத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். மேலும் பார்சி சமூகத்தினர் தங்கள் வணிக வளாகங்களை மூடி தெருநாய் கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நகரத்தில் பொருளாதார குழப்பம் ஏற்பட்டது. பார்சிகள், இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரின் அன்றாட செயல்பாடுகளை முடங்கியது. ஆங்கிலேயர்கள் மும்பை நகரத்தின் படைவீரர்களை அணிதிரட்டுகிறார்கள் என்ற செய்தி பரவியபோது, பிரிட்டிஷ் துருப்புக்களுக்கு உணவு மற்றும் நீர் விநியோகம் செய்வதை தடுக்கும் ஒரு வெற்றிகரமான முயற்சியில் மக்கள் ஈடுபட்டனர். பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய படையினர் மும்பை கோட்டை கூடி, கலகச் சட்டம் உரக்க வாசிக்கப்பட்டது. படைவீரர்கள் மக்கள் கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டக்குழுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய அதிகாரிகள் பார்சி சமூகத்தின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்ததினர். தெருநாய்களை கண்டால் கொல்வதை விட, காவல்துறையினர் நாய்களை மும்பை நகருக்கு வெளியே இடமாற்றம் செய்யவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் சிறையில் அடைக்கப்பட்ட தெருநாய் கொல்வதை எதிர்த்தவர்களை விடுவிக்கப்பட்டனர்.[1][2]

பின்விளைவு[தொகு]

கலவரத்திற்குப் பின் தெருநாய்கள் மும்பை புறநகர் பகுதிகளில் இடம்பெயந்தன.[3] இந்த நிகழ்வு மும்பை நகரத்தில் பார்சி மக்களின் செல்வாக்கையும் அதிகரித்தது.[1][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Palsetia, Jesse S. "Mad Dogs and Parsis: The Bombay Dog Riots of 1832." Journal of the Royal Asiatic Society, vol. 11, no. 1, 2001, pp. 13–30. JSTOR, JSTOR, www.jstor.org/stable/25188081.
  2. Palsetia, Jesse S. (2001-01-01) (in en). The Parsis of India: Preservation of Identity in Bombay City. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004121145. https://books.google.com/books?id=R6oNt3M_yLgC&q=Bombay+Dog+Riots&pg=PA124. 
  3. Palsetia, Jesse S. (2001-01-01) (in en). The Parsis of India: Preservation of Identity in Bombay City. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004121145. https://books.google.com/books?id=R6oNt3M_yLgC&q=Bombay+Dog+Riots&pg=PA124. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_நாய்_கலவரங்கள்&oldid=3697893" இலிருந்து மீள்விக்கப்பட்டது