மும்தாஸ் ஹபீள்
Jump to navigation
Jump to search
மும்தாஸ் ஹபீள் | |
---|---|
பிறப்பு | மும்தாஸ் மே 17, 1970 மதுராப்புர, தெனிப்பிட்டிய, வெலிகம |
தேசியம் | இலங்கைச் சோனகர் |
கல்வி | க.பொ.த. (உ.த) |
பணி | ஆசிரியர் |
அறியப்படுவது | கலைஞர் |
சமயம் | இஸ்லாம் |
முஹம்மது ஹபீள் முஹம்மது மும்தாஸ், வெலிகாமம் - மதுராப்புரயைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளரும், கவிஞருமாவார்.
தனது ஆரம்பக் கல்வியை வெலிகாமம் - மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலத்திலும், உயர்தரக் கல்வியை பேருவளை ஹுமைஸராக் கல்லுாரியிலும் கற்ற இவர், கவிதை, கட்டுரை, விமர்சனம், நடனம், ஒவியம் ஆகிய துறைகளில் பங்காற்றியவர். இவர் பல தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும் அவற்றில் நடித்தும் உள்ளார். மாணவர்களுக்கு நடனம் பயிற்றுவித்து போட்டிகளுக்குத் தயார்படுத்தும் இவர், சிறந்த நடிகர், ஒப்பனையாளர், இசையமைப்பாளர் என பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.
பெற்ற விருதுகள்
- பிரதேச சாகித்திய விருது - 1998
- தமிழ்ச் சுடர் விருது - 2018
ஆக்கங்கள் வெளிவந்த பத்திரிகைகள்
எழுதிய நுால்கள்
- இருண்ட திரைகள் (ரோணியோ கவிதை நுால்)
- விடிவெள்ளி (மாணாக்கருக்கான சஞ்சிகை - ரோணியோ சஞ்சிகை)
உசாத்துணை
- http://noolaham.net/project/44/4371/4371.html
- http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Mumthas%20habeel.html
- ↑ http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2006.04
- ↑ http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2007.09
- ↑ http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2005.07
- ↑ http://noolaham.net/project/47/4694/4694.pdf
- ↑ http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2007.10?uselang=ta
- ↑ http://noolaham.net/project/05/402/402.pdf