முப்பெரும் தேவியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முப்பெரும் தேவியர் என்பது இந்து சமயத்தில் மூன்று பெண் கடவுள்களைக் குறிப்பதாகும். இது திருமூர்த்திகளுக்கு இணையான பெண் வடிவம் ஆகும். இந்து மாதத்தில் முப்பெரும் தேவியர் லட்சுமி, பார்வதி, சரசுவதி ஆவர். சாக்தம் எனும் மதத்தில் யோகமயா எனும் கடவுளின் வேறு வடிவங்கள் தான் முப்பெரும் தேவியர். ஆதி பராசக்தி, தேவி என்றும் யோகமயாவை அழைப்பர்.[சான்று தேவை]

ராஜா ரவி வர்மா வரைந்த சரஸ்வதி தேவி
ராஜா ரவி வர்மா வரைந்த லட்சுமி தேவி

நவராத்திரி[தொகு]

புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர். வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் விழாவாக இந்த நவராத்திரி விழா உள்ளது.[1]

திருமூர்த்திகளின் பெண் வடிவம்[தொகு]

ஆண் கடவுளை மையமாக கொண்ட இந்து புராணத்தில் முப்பெரும் தேவியரைத் திருமூர்த்திகளின் மனைவியராகவும், துணை தெய்வங்களாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், சக்திதர்மத்தில் அவர்களுக்கு முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி படைக்கும் கடவுளாகவும், லட்சுமி காக்கும் கடவுளாகவும், பார்வதி (காளி) அழிக்கும் கடவுளாகவும், தேவியரின் துணை தெய்வங்களாக திருமூர்த்திகளையும் குறிப்பிட்டுள்ளனர்.

  • சரஸ்வதி இசை, கலையின் கடவுள். பிரம்மாவின் துணைவியான சரஸ்வதி அண்ட உணர்வு மற்றும் அண்ட அறிவு ஆவார்.
  • லட்சுமி செல்வம், செழிப்பு மற்றும் பொருள்களின் கடவுள். விஷ்ணுவின் மனைவி. லட்சுமி வெறும் பொருள் செல்வத்தை மட்டும் குறிக்கவில்லை, மகிமை, சிறப்பு, மகிழ்ச்சி, பெருமை, உயர்வு ஆகியவற்றையும் குறிக்கிறார்.
  • பார்வதி, அல்லது காளி, தேவி, சக்தி, அழகு, காதல், மற்றும் ஆன்மீகத்தை குறிக்கும் கடவுள். சிவனின் மனைவி. அவர் ஒரு நேரடி ஆதி பராசக்தி அவதாரம்.
    ராஜா ரவி வர்மா வரைந்த பார்வதி தேவி

மற்ற நாடுகளில்[தொகு]

புத்த மதம் மற்றும் சிங்க்ரெடிசம் வழியாக ஜப்பனீஸ் சின்த்தோ தெய்வங்களுடன் , முப்பெரும் தேவியர் ஜப்பானீய புராணங்களில் பெண் தெய்வங்கள் Benzaitennyo 弁財天女 (சரஸ்வதி), Kisshoutennyo 吉祥天女 (லக்ஷ்மி), மற்றும் Daikokutennyo 大黒天女 (காளி) ஆக இடம் பெற்றனர்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Tridevi statues in the Mahalaxmi temple in Mumbai