உள்ளடக்கத்துக்குச் செல்

முப்புளோரோ அசிட்டைல் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்புளோரோ அசிட்டைல் புளோரைடு
Trifluoroacetyl fluoride
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,2,2-முப்புளோரோ அசிட்டைல் புளோரைடு
இனங்காட்டிகள்
13709-33-6
ChemSpider 61035
EC number 206-558-3
InChI
  • InChI=1S/C2F4O/c3-1(7)2(4,5)6
    Key: DCEPGADSNJKOJK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 67716
  • C(=O)(C(F)(F)F)F
பண்புகள்
C2F4O
வாய்ப்பாட்டு எடை 116.01 g·mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
கொதிநிலை −59 °செல்சியசு
நீருடன் வினைபுரியும்
தீங்குகள்
GHS குறியீடு:
குறியீட்டுச் சொல்
அபாயம்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

முப்புளோரோ அசிட்டைல் புளோரைடு (Trifluoroacetyl fluoride) என்பது C2F4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1] டிரைபுளோரோ அசிட்டைல் புளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். கார்பன், புளோரின் மற்றும் ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது. கார்பாக்சிலிக் அமில புளோரைடுகள் குழுவில் இச்சேர்மம் இடம்பெறுகிறது. குறிப்பாக முப்புளோரோ அசிட்டிக் அமிலத்தின் புளோரைடாகக் கருதப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

முப்புளோரோ அசிட்டிக் நீரிலி மற்றும் நீரற்ற ஐதரசன் புளோரைடு ஆகியவற்றின் வினை மூலம் முப்புளோரோ அசிட்டைல் புளோரைடைத் தயாரிக்கலாம்:[2]

(CF3CO)2O + HF → CF3COF + CF3COOH

அல்லது முப்புளோரோ அசிட்டிக் அமிலம் மற்றும் வனேடியம் பெண்டாபுளோரைடு ஆகியவற்றின் வினை மூலமும் முப்புளோரோ அசிட்டைல் புளோரைடைத் தயாரிக்கலாம்.:[3]

CF3COOH + VF5 → VOF3 + HF + CF3COF↑

வேதிப் பண்புகள்

[தொகு]

முப்புளோரோ அசிட்டைல் புளோரைடு, அசிட்டோநைட்ரைலில் உள்ள ரூபிடியம் புளோரைடு அல்லது சீசியம் புளோரைடுடன் வினைபுரிந்து தொடர்புடைய பெண்டாபுளோரோ எத்தனோலேட்டை உருவாக்குகிறது:[4]

CF3COF + MF → CF3CF2OM (M = Rb, Cs)

இந்தச் சேர்மம் கந்தக மூவாக்சைடுடன் வினைபுரிந்து முப்புளோரோ அசிட்டைல் புளோரோசல்போனேட்டை உருவாக்குகிறது:[5]

CF3COF + SO3 → CF3C(O)OSO2F

முப்புளோரோ அசிட்டைல் புளோரைடு சேர்மம் தண்ணீரில் நீராற்பகுப்பு அடைகிறது.[6]

பயன்கள்

[தொகு]

முப்புளோரோ அசிட்டைல் புளோரைடு என்பது முப்புளோரோ அசிட்டிக் அமிலத்தின் ஒரு முக்கியமான தொழில்துறை இடைநிலை வேதிப்பொருள் ஆகும். இந்த அமிலம் அதன் நீராற்பகுப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Trifluoroacetyl fluoride" (in ஆங்கிலம்). NIST. Retrieved 22 August 2025.
  2. Olah, G; Kuhn, S (1 January 1961). "Notes. Organic Fluorine Compounds. XXVII. Preparation of Acyl Fluorides with Anhydrous Hydrogen Fluoride. The General Use of the Method of Colson and Fredenhagen.". The Journal of Organic Chemistry 26 (1): 237–238. doi:10.1021/jo01060a600. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263. https://pubs.acs.org/doi/abs/10.1021/jo01060a600. பார்த்த நாள்: 22 August 2025. 
  3. Fowler, Brian R.; Moss, Kenneth C. (1 January 1980). "The reaction of vanadium pentafluoride with phosphorus oxytrifluoride and with trifluoroacetic acid". Journal of Fluorine Chemistry 15 (1): 67–73. doi:10.1016/S0022-1139(00)85159-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1139. Bibcode: 1980JFluC..15...67F. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022113900851593. பார்த்த நாள்: 22 August 2025. 
  4. Seel, F.; Budenz, R.; Gombler, W. (1967). "Cesium and Rubidium Pentafluoroethoxide" (in en). Angewandte Chemie International Edition in English 6 (3): 256. doi:10.1002/anie.196702561. பன்னாட்டுத் தர தொடர் எண்:1521-3773. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/anie.196702561. பார்த்த நாள்: 22 August 2025. 
  5. Krespan, Carl G.; England, David C. (1 October 1975). "Addition of sulfur trioxide to acid halides and esters". The Journal of Organic Chemistry 40 (20): 2937–2940. doi:10.1021/jo00908a018. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263. https://pubs.acs.org/doi/abs/10.1021/jo00908a018. பார்த்த நாள்: 22 August 2025. 
  6. Song, Xinli (1 December 2018). "Catalytic hydrolyses of trifluoroacetyl fluoride by water". Chemical Physics Letters 713: 137–144. doi:10.1016/j.cplett.2018.10.038. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2614. Bibcode: 2018CPL...713..137S. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0009261418308583. பார்த்த நாள்: 22 August 2025. 
  7. López, Simón E.; Salazar, José (1 December 2013). "Trifluoroacetic acid: Uses and recent applications in organic synthesis". Journal of Fluorine Chemistry 156: 73–100. doi:10.1016/j.jfluchem.2013.09.004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1139. Bibcode: 2013JFluC.156...73L. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022113913003163. பார்த்த நாள்: 22 August 2025.