முப்புளோரோமீத்தேன்சல்போனிக் நீரிலி
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
முப்புளோரோமீத்தேன்சல்போனிக் நீரிலி | |||
| இனங்காட்டிகள் | |||
| 358-23-6 | |||
Beilstein Reference |
1813600 | ||
| ChEBI | CHEBI:48509 | ||
| ChemSpider | 61068 | ||
| EC number | 206-616-8 | ||
InChI
| |||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 67749 | ||
| |||
| UNII | 8W034LHG1U | ||
| பண்புகள் | |||
| C2F6O5S2 | |||
| வாய்ப்பாட்டு எடை | 282.13 g·mol−1 | ||
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
| அடர்த்தி | 1.6770 கி/மி.லிட்டர் | ||
| கொதிநிலை | 82[1] °C (180 °F; 355 K) | ||
| வினையில் ஈடுபட்டு திர்ப்லிக் அமிலம் உருவாகும் | |||
| தீங்குகள் | |||
| GHS குறியீடு: | |||
விளக்கப்படங்கள் |
|||
குறியீட்டுச் சொல் |
அபாயம் | ||
இடர் அறிக்கைகள் |
H272, H302, H314, H335 | ||
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
முப்புளோரோமீத்தேன்சல்போனிக் நீரிலி (Trifluoromethanesulfonic anhydride) என்பது C2F6O5S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். (CF3SO2)2O என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். திரிப்லிக் நீரிலி என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் திரிப்லிக் அமிலத்தின் வழிப்பெறுதி நீரிலியாக வகைபடுத்தப்படுகிறது. முப்புளோரோமீத்தேன்சல்போனிக் நீரிலி ஒரு வலுவான மின்னணு கவரியாகும். திரிப்லைல் குழுவான CF3SO2 குழுவை சேர்மங்களில் அறிமுகப்படுத்துவதற்குப் பயன்படுகிறது. சுருக்கமாக Tf2O என அழைக்கப்படும் திரிப்லிக் நீரிலி என்பது மீ அமில திரிப்லிக் அமிலத்தின் CF3SO2OH அமில நீரிலியாகும்.[2][3]
தயாரிப்பும் பயனும்
[தொகு]திரிப்லிக் அமிலத்தை P4O10 சேர்மத்தைப் பயன்படுத்தி நீர்நீக்கம் செய்வதன் மூலம் திரிப்லிக் நீரிலி தயாரிக்கப்படுகிறது.[2][4]
கீட்டோன்களை ஈனால் திரிப்லேட்டுகளாக மாற்றுவதற்கு திரிப்லிக் நீரிலி பயனுள்ளதாக இருக்கும்.[5]
ஒரு பிரதிநிதித்துவ பயன்பாட்டில், ஓர் இமைனை [6]பீனால்களாகவும் திரிப்லிக் எசுத்தர்களாகவும் மாற்றுகிறது. இது C-O பிணைப்பின் பிளவுகளை செயல்படுத்துகிறது.[7][8]
மதிப்பீடு
[தொகு]திரிப்லிக் நீரிலியில் உள்ள பொதுவான அசுத்தம் திரிப்லிக் அமிலமாகும். இது ஒரு நிறமற்ற திரவமாகும். திரிப்லிக் நீரிலியின் மாதிரிகளை 19எப் அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலை மூலம் மதிப்பிடலாம்: மில்லியனுக்கு −72.6 பகுதிகள்[9] எதிர் −77.3 திரிப்லிக் ஐதராக்சைடு (std CFCl3).
பாதுகாப்பு
[தொகு]முப்புளோரோமீத்தேன்சல்போனிக் நீரிலி ஒரு தீவிரமான மின்னணு கவரியாகும். உடனடியாக நீராற்பகுப்பு அடைந்து வலுவான அமிலமான திரிப்லிக் அமிலமாக மாறுகிறது. இது தோல் மற்றும் கண்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bloodworth, A.J.; Curtis, Richard J.; Spencer, Michael D.; Tallant, Neil A. (March 1993). "Oxymetallation. Part 24. Preparation of cyclic peroxides by cycloperoxymercuriation of unsaturated hydroperoxides.". Tetrahedron 49 (13): 2729–2750. doi:10.1016/S0040-4020(01)86350-X. https://archive.org/details/sim_tetrahedron_1993-03-26_49_13/page/2728.
- 1 2 Martínez, A. G.; Subramanian, L. R.; Hanack, M. (2016). "Trifluoromethanesulfonic Anhydride". Encyclopedia of Reagents for Organic Synthesis. pp. 1–17. doi:10.1002/047084289X.rt247.pub3. ISBN 9780470842898.
{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Baraznenok, Ivan L.; Nenajdenko, Valentine G.; Balenkova, Elizabeth S. (May 2000). "Chemical Transformations Induced by Triflic Anhydride". Tetrahedron 56 (20): 3077–3119. doi:10.1016/S0040-4020(00)00093-4. https://archive.org/details/sim_tetrahedron_2000-05-12_56_20/page/n15.
- ↑ Peter J. Stang, Thomas E. Dueber (1974). "Preparation of Vinyl Trifluoromethanesulfonates: 3-Methyl-2-Buten-2-Yl Triflate". Organic Syntheses 54: 79. doi:10.15227/orgsyn.054.0079.
- ↑ Cacchi, Sandro; Morera, Enrico; Ortar, Giorgio (2011). "Discussion Addendum for: Palladium-Catalyzed Reduction of Vinyl Trifluoromethanesulfonates to Alkenes: Cholesta-3,5-diene". Organic Syntheses 88: 260. doi:10.15227/orgsyn.088.0260.
- ↑ Baker, T. J.; Tomioka, M.; Goodman, M. (2002). "Preparation and Use of N,N'-Di-BOC-N''-Triflylguanidine". Organic Syntheses 78: 91. doi:10.15227/orgsyn.078.0091.
- ↑ McWilliams, J. C.; Fleitz, F. J.; Zheng, N.; Armstrong, III, J. D.. "Preparation of n-Butyl 4-Chlorophenyl Sulfide". Organic Syntheses 79: 43. doi:10.15227/orgsyn.079.0043.
- ↑ Cai, D.; Payack, J. F.; Bender, D. R.; Hughes, D. L.; Verhoeven, T. R.; Reider, P. J. (1999). "(R)-(+)- and (S)-(−)-2,2'-Bis(Diphenylphosphino)-1,1'-Binaphthyl (BINAP)". Organic Syntheses 76: 6. doi:10.15227/orgsyn.076.0006.
- ↑ Dell'Amico, Daniela Belli; Boschi, Daniele; Calderazzo, Fausto; Labella, Luca; Marchetti, Fabio (28 February 2002). "Synthesis, and crystal and molecular structures of the triflato and trifluoroacetato complexes of zinc, Zn(O3SCF3)2(DME)2 and [Zn(O2CCF3)2(DME)n"]. Inorganica Chimica Acta 330 (1): 149–154. doi:10.1016/S0020-1693(01)00739-3. http://144.206.159.178/ft/458/52133/914984.pdf.
- ↑ "MSDS - 176176". www.sigmaaldrich.com. Retrieved 2020-08-09.

