முப்புளோரோசிலேன்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| ஐயூபிஏசி பெயர்
டிரைபுளோரோசிலேன் | |||
| இனங்காட்டிகள் | |||
| 13465-71-9 | |||
| ChemSpider | 122985 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 139462 | ||
| |||
| பண்புகள் | |||
| HF3Si | |||
| வாய்ப்பாட்டு எடை | 86.09 g/mol | ||
| தோற்றம் | நிறமற்ற வாயு | ||
| அடர்த்தி | 1.86 கி/செ.மீ3 | ||
| உருகுநிலை | −131 °C (−204 °F; 142 K) | ||
| கொதிநிலை | −97.5 °C (−143.5 °F; 175.7 K) | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
முப்புளோரோசிலேன் (Trifluorosilane) என்பது F3HSi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிலையான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில், முப்புளோரோசிலேன் ஒரு நிறமற்ற வாயுவாகும்.[1] டிரைபுளோரோசிலேன் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. இயங்குருப்பான F3Si முப்புளோரோசிலில் என்று சரியாகக் குறிப்பிடப்பட்டாலும் பெரும்பாலும் முப்புளோரோசிலேன் என்று அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]குறைந்த வெப்பநிலை உயர்-வெற்றிட வடிகட்டுதல் மூலம் முப்புளோரோசிலேன் சுத்திகரிக்கப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளது. SbF3 மற்றும் HSiCl3 சேர்மங்களுக்கு இடையிலான வினையில் முப்புளோரோசிலேன் தயாரிக்கப்படுகிறது.[2] 200-400 °செல்சியசு வெப்பநிலையில் HCl மற்றும் சிலிக்கான் இடையே செப்பு வினையூக்கிய வினையின் மூலமும் HSiCl3 பெறப்படுகிறது. சிலிக்கானின் சில செதுக்கல் செயல்பாடுகளிலும் முப்புளோரோசிலேன் உருவாக்கம் பதிவாகியுள்ளது.[3]
பண்புகள்
[தொகு]முப்புளோரோசிலேனின் மின் இருமுனை திருப்புத்திறன் 1.26 டெபை ஆகும்.[4] சிலிக்கான்-புளோரின் பிணைப்பின் பிணைப்பு நீளம் 1.555 Å, Si-H பிணைப்பு நீளம் 1.55 Å, மற்றும் ∠FSiF பிணைப்புக் கோணம் 110° ஆகும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Perry, Dale L. (2011-06-15). Handbook of Inorganic Compounds, Second Edition. CRC Press. ISBN 9781439814628.
- ↑ Zuckerman, J. J. (2009-09-17). Inorganic Reactions and Methods, The Formation of Bonds to Halogens. John Wiley & Sons. ISBN 9780470145388.
- ↑ Lippold, Marcus; Böhme, Uwe; Gondek, Christoph; Kronstein, Martin; Patzig-Klein, Sebastian; Weser, Martin; Kroke, Edwin (December 2012). "Etching Silicon with HF-HNO 3 -H 2 SO 4 /H 2 O Mixtures - Unprecedented Formation of Trifluorosilane, Hexafluorodisiloxane, and Si-F Surface Groups". European Journal of Inorganic Chemistry 2012 (34): 5714–5721. doi:10.1002/ejic.201200674. பன்னாட்டுத் தர தொடர் எண்:1434-1948. http://doi.wiley.com/10.1002/ejic.201200674. பார்த்த நாள்: 2014-08-27.
- ↑ Ghosh, S. N.; Trambarulo, Ralph; Gordy, Walter (February 1953). "Electric Dipole Moments of Several Molecules from the Stark Effect". The Journal of Chemical Physics 21 (2): 308–310. doi:10.1063/1.1698877. Bibcode: 1953JChPh..21..308G. https://archive.org/details/sim_journal-of-chemical-physics_1953-02_21_2/page/n117.
- ↑ Sheridan, John; Gordy, Walter (1 March 1950). "Microwave Spectra and Molecular Constants of Trifluorosilane Derivatives. Si F 3 H, Si F 3 C H 3 , Si F 3 Cl, and Si F 3 Br". Physical Review 77 (5): 719. doi:10.1103/PhysRev.77.719. Bibcode: 1950PhRv...77..719S. https://archive.org/details/sim_physical-review_1950-03-01_77_5/page/n145.

