முப்பீனைலார்சின்
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
முப்பீனைலார்சேன் | |
வேறு பெயர்கள்
முப்பென்சினிடோவார்சனிக்
டிரைபீனைலார்சின் | |
இனங்காட்டிகள் | |
603-32-7 | |
ChemSpider | 11280 |
EC number | 210-032-9 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 11773 |
வே.ந.வி.ப எண் | CH8942500 |
| |
UNII | MN8EZ3FL74 |
UN number | 3465 |
பண்புகள் | |
C18H15As | |
வாய்ப்பாட்டு எடை | 306.24 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
அடர்த்தி | 1.395 கி செ.மீ−3 |
உருகுநிலை | 58 முதல் 61 °C (136 முதல் 142 °F; 331 முதல் 334 K) |
கொதிநிலை | 373 °C (703 °F; 646 K) at 760 மி.மீ.பாதரசம் |
கரையாது | |
கரைதிறன் | பென்சீன், எத்தில் ஈதரில் கரையும், எத்தனாலில் சிறிதளவு கரையும் |
-177.0·10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Triclinic |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | T N |
R-சொற்றொடர்கள் | R23/25, R50/53 |
S-சொற்றொடர்கள் | S20/21, S28, S45, S60, S61 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
முப்பீனைலார்சின் (Triphenylarsine) என்பது As(C6H5)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம ஆர்சனிக் வகை சேர்மமாகும். பெரும்பாலும் AsPh3 என்ற சுருக்க வாய்ப்பாட்டால் இது குறிப்பிடப்படுகிறது. நிறமற்று படிகநிலையில் காணப்படும் முப்பீனைலார்சினை ஓர் ஈந்தணைவியாகவும் ஒருங்கிணைப்பு வேதியியலில் ஒரு வினையாக்கியாகவும் பயன்படுத்துகிறார்கள். பட்டைக்கூம்புரு வடிவமைப்பில் As-C பிணைப்பு இடைவெளி 1.942–1.956 Å அளவிலும் C-As-C பிணைப்புக் கோணம் 99.6–100.5° என்ற அளவிலும் கொண்ட கட்டமைப்பில் இச்சேர்மம் காணப்படுகிறது. [1]
ஆர்சனிக்முக்குளோரைடுடன் குளோரோபென்சீனைச் சேர்த்து உடன் ஒடுக்கும் முகவராக சோடியம் சேர்க்கப்பட்டு மேற்கொள்ளப்படும் வினையில் முப்பீனைலார்சின் தயாரிக்கப்படுகிறது. :[2]
- AsCl3 + 3 PhCl + 6 Na → AsPh3 + 6 NaCl
வேதி வினைகள்
[தொகு]இலித்தியம் தனிமத்துடன் முப்பீனைலார்சின் வினைபுரிந்து இலித்தியம் இருபீனைலார்சினைடு உருவாகிறது. :[3]
- AsPh3 + 2 Li → LiAsPh2 + LiPh
நன்கு அறியப்பட்ட வீழ்படிவாக்கும் முகவரான நாற்பீனைலார்சோனியம் குளோரைடு தயாரிப்பில் முப்பீனைலார்சின் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. [2]
உலோகங்களுடன் சேர்ந்து முப்பீனைலார்சின் உலோக அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கிறது. இவற்றுள் பெரும்பாலானவை தொடர்புடைய முப்பீனைல்பாசுபீன் வழிப்பெறுதிகளை ஒத்த சேர்மங்களாக உள்ளன. IrCl(CO)(AsPh3)2, RhCl(AsPh3)3, மற்றும் Fe(CO)4(AsPh3) உள்ளிட்ட சேர்மங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். [4]
முப்பீனைலார்சோனியம் குளோரைடு முப்பீனைலார்சினிலிருந்து தயாரிக்காப்படுகிறது. :[5]
- (C6H5)3As + Br2 → (C6H5)3AsBr2
- (C6H5)3AsBr2 + H2O → (C6H5)3AsO + 2 HBr
- (C6H5)3AsO + C6H5MgBr → (C6H5)4AsOMgBr
- (C6H5)4AsOMgBr + 3 HCl → (C6H5)4AsCl.HCl + MgBrCl
- (C6H5)4AsCl.HCl + NaOH → (C6H5)4AsCl + NaCl + H2O
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mazhar-ul-Haque, Hasan A. Tayim, Jamil Ahmed, and William Horne "Crystal and molecular structure of triphenylarsine" Journal of Chemical Crystallography Volume 15, Number 6 / 1985. எஆசு:10.1007/BF01164771 10.1007/BF01164771
- ↑ 2.0 2.1 Shriner, R. L.; Wolf, C. N. (1963). "Tetraphenylarsonium Chloride Hydrochloride". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv4p0910.; Collective Volume, vol. 4, p. 910 article
- ↑ W. Levason, C. A. Mcauliffe (1976). "Cis -2-Diphenylarsinovinyldiphenylphosphine and 2-Diphenylarsinoethyldiphenylphosphine". cis-2-Diphenylarsinovinyldiphenylphosphine and 2-Diphenylarsinoethyldiphenylphosphine. Inorganic Syntheses. Vol. 16. pp. 188–192. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132470.ch50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132470.
- ↑ C. A. McAuliffe, ed. (1973). Transition Metal Complexes of Phosphorus, Arsenic, and Antimony Ligands. J. Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-470-58117-4.
- ↑ Shriner, R. L.; Wolf, Calvin N. (1950). "Tetraphenylarsonium Chloride Hydrochloride". Organic Syntheses 30: 95. doi:10.15227/orgsyn.030.0095.