முப்பருமான நுண்நோக்கியைப் பயன்படுத்தும் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முப்பருமான நுண்நோக்கியைப் பயன்படுத்தும் முறை [தொகு]

சிறந்த முறையில் பயன்படுத்த குறிப்புகள்[தொகு]

ஒரு முப்பருமான நுண்நோக்கியை சிறந்த முறையில் பயன்படுத்த பின்வரும் கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும்.

  • மனிதர்களுக்கு ஏற்ப இரண்டு கண்களுக்கும் இடையே உள்ள தூரத்திற்கேற்றவாறு கண்ணருகு நுண்நோக்கிக் குழாய்களை நகர்த்தி ஒரே முப்பருமான உருவம் தெளிவாகத் தொியும்படி செய்யவேண்டும்.பொதுவாக வலதுபக்கக்குழாய் நிலையானது. இடது பக்கக்குழாயை நகர்த்த முடியும்.
  • பொருளருகு வில்லைக்கூறுகளை ஒளியின் பாதையில் மையப்படுத்திக் கொள்ள வேண்டும். முப்பட்டகங்களும் சாியாகப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு தவறுகளும் இருந்தால் இரட்டைப் பிம்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
  • ஒளிமூலம் அதிக வெப்பமுள்ள ஒளியை உண்டாக்கக்கூடாது. வெப்பம் அதிகம் உண்டாக்கும் விளக்குகள் பொருளைச் சேதப்படுத்திவிடும். எனவே 'குளிர்ச்சியான' விளக்குகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • தேவையான வடிப்பான்களை ஒளிமூலங்களுக்கு முன்னால் பொருத்தினால் பொருட்களின் பிம்பங்களில் சாியான பொலிவு கிடைக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

ஆய்வகச் சோதனை முறைகளும் கருவிகளின் செயல்பாடுகளும், முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி.

மேலும் படிக்க[தொகு]

https://en.wikipedia.org/wiki/Optical_microscope#Compound_microscope