முபாரக் ஷா (சகதாயி கான்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முபாரக் ஷா
கான்
சகதாயி கானரசின் கான்
முதல் ஆட்சி1252 – 1260
முன்னையவர்காரா குலாகு
பின்னையவர்அல்கு
பிரதிநிதிஒர்கானா
இரண்டாம் ஆட்சிமார்ச் 1266  – செப்டம்பர் 1266
முன்னையவர்அல்கு
பின்னையவர்கியாசுதீன் பரக்
பிறப்புதெரியவில்லை
இறப்பு1276
மரபு போர்சிசின் அரசமரபு
மதம்சன்னி இசுலாம்

முபாரக் ஷா என்பவர் சகதாயி கானரசின் கான் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் காரா குலாகு மற்றும் எர்ஜின் கதுனின் மகன் ஆவார். இசுலாமுக்கு மதம் மாறிய முதல் சகதாயி கான் இவர் தான்.[1] 1252இல் இவரது தந்தையின் இறப்பிற்குப் பிறகு, முபாரக் ஷா சகதாயி கானரசின் கனாகப் பதவிக்கு வந்தார். இவரின் தாய் அரசப் பிரதிநிதியாகச் செயல்பட்டார். 1260இல் ககான் பதவிக்கு உரிமை கோரிய அரிக் போகே, சகதாயி கானின் பேரனாகிய அல்குவைக் கானாக நியமித்தார். அடுத்த ஆண்டு கானரசின் பெரும்பாலான பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் அல்கு வைத்திருந்தார். அல்கு அரிக் போகேவிற்கு எதிராக 1262ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்ட போது ஒர்கானா அல்குவுக்கு ஆதரவளித்தார். 1266ஆம் ஆண்டு அல்கு இறந்த பிறகு, குப்லாய் கானின் உத்தரவின்றி, முபாரக் ஷாவைக் கானாக எர்ஜின் மீண்டும் பதவியில் அமர வைத்தார். குப்லாய் கானும் ககான் பதவிக்கு உரிமை கோரி இருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன் அரிக் போகேயைத் தோற்கடித்து இருந்தார். எனினும் குப்லாய் கான், சகதாயியின் கொள்ளுப் பேரனாகிய பரக்கிற்குக் கானரசின் இருவராட்சி முறையில் இரண்டாம் ஆட்சியாளராகுவதற்கு ஆதரவளித்தார்.[2] முபாரக் ஷாவின் இராணுவத்தின் விசுவாசத்தைப் பரக் பெற்றார். சீக்கிரமே பரக், முபாரக் ஷாவிற்கு எதிராக முன்னேறினர். முபாரக் ஷாவை அதே ஆண்டு நாடு கடத்தினார். பிறகு முபாரக் ஷா 1271ஆம் ஆண்டு பரக்கிற்கு எதிராகக் கய்டுவிற்கு ஆதரவளித்தார். எனினும் சீக்கிரமே கய்டுவின் மற்றொரு எதிரியான ஈல்கான் அபகாவின் பக்கம் கட்சி தாவும் நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்.

கரவுனாக்களின் தலைவராக அபகா கான் இவரை நியமித்தார். 1276ஆம் ஆண்டு தென்கிழக்குப் பாரசீகப் பகுதிகளைக் குடும் சேதத்திற்கு உள்ளாக்கிய போது இயற்கையான காரணங்களால் இவர் இறந்தார்.

குடும்பம்[தொகு]

இவருக்கு ஏராளமான மனைவிகளும் ஐந்து மகன்களும் இருந்தனர்.

 1. ஒல்ஜை புகா
  • குத்லுக் ஷா
 2. போரல்கி
  • துத்லுக்
 3. கோர்கடை
 4. எசன் புலத்
 5. கதக்

உசாத்துணை[தொகு]

 1. Rene Grousset, The Empire of the Steppes, New Brunswick 1970, p. 332
 2. Boyle, John Andrew (1971). The Successors of Genghis Khan. Columbia University Press. p. 151.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முபாரக்_ஷா_(சகதாயி_கான்)&oldid=3603829" இலிருந்து மீள்விக்கப்பட்டது