உள்ளடக்கத்துக்குச் செல்

முன் மழலையர் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன் மழலையர்ப் பள்ளி விளையாட்டு மைதானம்

முன்-மழலையர் பள்ளி (தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் அரும்புகள் என்று அழைக்கப்படுகின்றன[1]) (Pre-kindergarten also called pre-K or PK) என்பது அமெரிக்கா, கனடா, துருக்கி, கிரேக்கம் போன்ற நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வகுப்பறை அடிப்படையிலான பாலர் பள்ளித் திட்டமாகும். [2] இது பாலர் பள்ளி மூலமாகவோ அல்லது தொடக்கப்பள்ளிகளின் சேர்க்கை ஆண்டுக்குள்ளோ கற்பிக்கபடலாம். குழந்தைப் பருவக் கல்வியில் முன் மழலையர் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை 1922 முதல் அமெரிக்காவில் உள்ளன. இவை பொதுவாக தனியார் அமைப்புகளால் நடத்தப்படுகின்றன. அமெரிக்காவின் கூட்டாட்சி நிதியுதவி பெற்ற முன் மழலையர் பள்ளி திட்டமான அமெரிக்க ஹெட் ஸ்டார்ட் திட்டம் 1967 இல் துவக்கப்பட்டது. இது குழந்தைகளை (குறிப்பாக பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள்) பள்ளிகளை பள்ளிக்குத் தயார்படுத்தும் ஒரு திட்டமாகும். [3]

முன் மழலையர் பள்ளிகளானது குழந்தையின் சமூக வளர்ச்சி, உடல் வளர்ச்சி, உணர்ச்சி வளர்ச்சி, அறிதிறன் வளர்ச்சி ஆகியவற்றில் சமமாக கவனம் செலுத்துவதன் மூலம், மற்ற குழந்தை பராமரிப்பு மையங்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்கின்றன. [ சான்று தேவை ] முன் மழலையர் பள்ளிகள் என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் பொதுவாக பள்ளி நிர்வாகிகளின் மேற்பார்வையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளியில் செயல்படுவதாகும். இவை மாநில அல்லது மத்திய அரசு நிதி மற்றும் தனியார் நன்கொடைகளால் முழுமையாக நிதியளிக்கப்படும். இந்தியா போன்ற நாடுகளில் பொதுவாக இவை தனாயாரால் நடத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நிதிச் சுமையால் மூச்சுத் திணறும் தாய்த்தமிழ்ப் பள்ளிகள்! - என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?". Hindu Tamil Thisai. 2025-04-04. Retrieved 2025-04-05.
  2. "At What Age Can You Start Pre-K in Georgia?". Education - Seattle PI.
  3. Andrews, Shirley P.; Slate, John R. (March 2002). "Public and private prekindergarten programs: A comparison of student readiness". Educational Research Quarterly 25 (3): 59–73. https://www.proquest.com/openview/1fd9d6a85609b39e6644082a990af151/1?pq-origsite=gscholar&cbl=48020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்_மழலையர்_பள்ளி&oldid=4245554" இலிருந்து மீள்விக்கப்பட்டது