முன் ஆயத்தப் படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன் ஆயத்தப் படங்கள் சில

முன் ஆயத்தப் படம் (Clip art)[1] என்பது எவ்வித ஊடகங்களையும் விளக்குவதற்குப் பயன்படும் முன்னரே தயாரிக்கப்பட்ட இயங்குபடப் புகைப்படம் ஆகும். தற்காலத்தில் முன் ஆயத்தப் படங்கள் அழைப்பிதழ்கள் தொடக்கம் மெழுகுவர்த்திகள் வரை சொந்தத் தேவைகளுக்காகவும் வர்த்தகத் தேவைகளுக்காகவும் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன.[2] முன் ஆயத்தப் படங்கள் பல வடிவங்களில் காணப்படுகின்றன. பொதுவாக இவை இலத்திரனியல் வடிவமாகவும் அச்சிடப்பட்டதாகவும் காணப்படுகின்றன. எனினும் பொதுவாக இவை தற்போது உருவாக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டு இலத்திரனியல் வடிவமாகப் பயன்படுத்தப்படுகின்றன. முன் ஆயத்தப் படங்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து பரந்த உள்ளடக்கங்களை க் கொண்டதாகவும், பல கோப்பு வடிவங்களிலும், உரிம கட்டுப்பாடுகள் கொண்டதாகவும், அதீத விபரிக்கும் திறன் கொண்டதாகவும் அமைகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Clip art is a collection of pictures or images that can be imported into a document or another program". பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2016.
  2. "All Clipart on Openclipart are available for unlimited commercial use". பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2016.

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
clipart
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்_ஆயத்தப்_படம்&oldid=3225324" இலிருந்து மீள்விக்கப்பட்டது