முன்மார்பு குத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன்மார்பு குத்தல்
Precordial catch syndrome
Precordial catch syndrome Area.png
முன்மார்பு குத்தல் நோயால் பாதிக்கப்படும் பொதுவான பகுதி[1]
சிறப்புகுழந்தை மருத்துவம், குடும்ப மருத்துவர்
அறிகுறிகள்கூர்மையான கத்திக்குத்து போன்ற மார்பு வலி[1]
வழமையான தொடக்கம்திடீரென[1]
கால அளவுமூன்று நிமிடங்களுக்கும் குறைவு[1]
காரணங்கள்தெளிவாக அறியப்படவில்லை[1]
ஒத்த நிலைமைகள்மார்பு நெரிப்பு, இதய உறை வீக்கம், நுரையீரல் வீக்கம் மற்றும் மார்பு அதிர்ச்சி[1]
சிகிச்சைமறு உறுதியில்லை[1]
முன்கணிப்புநன்மை[1]
நிகழும் வீதம்மிகப்பொதுவானது[1]

முன்மார்பு குத்தல் (Precordial catch syndrome) என்பது மார்பு பகுதியில் உண்டாகும் ஒரு தீவிரமற்ற நோய் நிலையாகும். மார்பில் கூர்மையான கத்தியால் குத்துவது போன்ற நெஞ்சு வலி உண்டாகும் நிலையை மருத்துவத் துறையில் முன்மார்பு குத்தல் நோய்த்தொகை என்கிறார்கள்.[1]. இந்த மார்புவலி சிலநிமிடங்கள் மட்டுமே இருக்கும் [1]. மார்பின் ஒரு சிறிய பகுதிக்குள் நிகழும் இக்குத்தல் நோயால் சுவாசச் செயல்முறை மோசமைடகிறது [1]. ஒருவர் ஓய்வுநிலையில் இருக்கும் போது இவ்வலி தொடங்கும் ஆனால் பிற அறிகுறிகள் ஏதும் தோன்றுவது இல்லை.[1]. வலி தோன்றுபவர்களுக்கு வலி குறித்த கவலையும் பதட்டமும் ஏற்படுகிறது.[1].

இத்தகைய முன்மார்பு வலியின் அடிப்படை காரணம் தெளிவாக அறியப்படவில்லை[1].மார்பின் சுவரிலிருந்து அல்லது விலா எலும்புகளுக்கு இடையேயுள்ள நரம்பின் உறுத்துதலில் இருந்து தோன்றும் வலியே முன்மார்பு குத்தல் நோயாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. [1][2]. இவ்வலியினால் நோயாளிகள் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆட்படுகிறார்கள் [2]. இந்த நெஞ்சுவலி இதயத்தில் உண்டாகும் வலியில்லை[1]. பொதுவாக தோன்றும் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டுதான் இதற்கான நோயறிதல் அறியப்படுகிறது. [1]. மார்பு நெரிப்பு, இதய உறை வீக்கம், நுரையீரல் வீக்கம் மற்றும் மார்பு அதிர்ச்சி போன்ற பாதிப்புகளுக்கும் இதே அறிகுறிகள் தோன்றக்கூடும்.[1].

முன்மார்பு குத்தல் பொதுவாக எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லாமல் மறுபடியும் வராது என்ற உறுதி ஏதுமின்றி தானாகவே குணமாகிறது[1]. பின்விளைவுகள் எப்போதும் நலம் தருவதாகவே அமைகின்றன [1]. இந்த நோய்குறி பொதுவாக எல்லோருக்கும் வரக்கூடியதாகும். 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்நோயால் பொதுவாக பாதிக்கப்படுகின்றனர்.[1]. நோய் பாதிப்பு ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சமமாகவே உள்ளது[1]. பெரியவர்களிட்த்தில் இந்நோய் பாதிப்பு அதிகம் இருப்பதில்லை[2]. முன்மார்பு குத்தல் நோய்த்தொகை தொடர்பான செய்திகள் 1955 ஆம் ஆண்டுகளிலேயே விவரிக்கப்பட்டுள்ளன.[1].

அறிகுறிகள்[தொகு]

கூர்மையான கத்திக்குத்து போன்ற நெஞ்சு வலி மார்பில் உண்டாகும். [1] என்பதே முன்மார்பு குத்தல் நோய்க்கான அடையாளமாகும். ஒருவர் ஓய்வு நிலையில் இருக்கும்போது இவ்வலி தோன்றலாம். சுவாசப் பிரச்சினையும் மார்பின் ஒரு சிறிய பகுதியில் வலியும் இருக்கலாம். சிலநிமிடங்கள் மட்டுமே இவ்வலி நீடிக்கும். பிற அறிகுறிகள் ஏதும் தோன்றுவது இல்லை.[1]. வலிகண்டவர்கள் வலி குறித்த மனக்கவலை மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்படுவார்கள்.[1]

காரணங்கள்[தொகு]

முன்மார்பு குத்தல் தோன்றுவதற்கான காரணங்கள் தெளிவாக அறியப்படவில்லை[1]. நெஞ்சுவலி மார்பின் சுவரிலிருந்தோ அல்லது விலா எலும்புகளுக்கு இடையேயுள்ள தசை நரம்பின் உறுத்துதலாகவோ இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[1][2]. ஆனால் இந்த நெஞ்சுவலியானது இதயத்தில் உண்டாகும் வலியில்லை.[1].

சிகிச்சை[தொகு]

முன்மார்பு குத்தல் நோய்த்தொகை பொதுவாக எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லாமல் மறுபடியும் வராது என்ற உறுதி ஏதுமின்றி தானாகவே குணமாகி விடுகிறது. அரிதாக சில சுவாசங்களுக்குப் பின்னர் வலி காணாமல் போவதுமுண்டு.

இவ்வலியினால் மிகப்பெரிய ஆபத்தோ உயிருக்கு அச்சுறுத்தலோ ஏதுமில்லை. இவ்வலி மாரடைப்புக்கு ஓர் அடையாளம் அல்லது இதயம் தொடர்பான வேறு சில தீவிர பாதிப்புகளின் அடையாளம் என்ற கோணத்தில் நோக்கி பலர் அச்சப்பட்டு மனக்கவலைக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். உயிருக்கு ஆபத்தானது என்ற நிலையில்லாததால் இவ்வலிகண்டவர்கள் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதில்லை. இருப்பினும் உடற்பயிற்சி போன்ற சில சாதாரண செயல்களில் இருக்கும்போது வலி கண்டால் அப்பயிற்சியிலிருந்து விலகுவதைத் தேர்வுசெய்யலாம். ஏனெனில் இது வலியை மேலும் பெரிதுபடுத்தக்கூடும்.

நோயின் வரலாறு[தொகு]

1893 ஆம் ஆண்டில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த இதயநோய் நிபுணர் என்றி உச்சார்ட்டு முதன் முதலில் இந்நோயைக் கண்டறிந்து பெயரிட்டார்.[3]. இதயத்திற்கு முன் என்ற பொருள் கொண்ட இலத்தீன் மொழிச் சொல்லை அடிப்படையாகக் கொண்டு இந்நோய்க்கு அவர் பெயரிட்டார். உச்சார்டு நோய்க்குறி என்றும் இது அறியப்பட்டது.[4][5].

மேலும் 1370 ஆம் ஆண்டில் “கை டி சௌலியாக் என்ற பிரஞ்சு மருத்துவரின் சிரூர்கியா மேக்னா” என்று தலைப்பிடப்பட்ட வழிகாட்டி நூலில் இடம்பெற்றிருந்த பிரிகார்டியல் என்ற இப்பெயர் பிரஞ்சு மருத்துவ அகராதியில் சேர்க்கப்பட்டது. முன்னதாக உதரவிதானம் என்ற மார்புக்கூட்டின் இடைதிரையை குறிக்கப் பயன்பட்ட இச்சொல் தற்போது வழக்கத்தில் இல்லாமல் போனது.[6] Previously, the Latin term "praecordia" had been used to refer to the diaphragm, a sense now obsolete.[6][7].

1955 ஆம் ஆண்டில் சிகாகோவில் அமைந்துள்ள மைக்கேல் ரீசு மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் மருத்துவத் துறையின் பயிற்சியாளர்களான மில்லர் மற்றும் டெக்சிடர் ஆகியோர் உச்சார்ட் நோய்க்குறியைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்தனர்[8]. மில்லர் உட்பட 10 நோயாளிகளுக்கு இந்த முன்மார்பு குத்தல் நோய்க்குறி இருந்த்தாக அவர்கள் தெரிவித்தனர். 1978 ஆம் ஆண்டில் இந்த நோய்க்குறியைப் பற்றி சுபாரோ மற்றும் பேர்ட் என்பவர்கள் ஆராய்ந்ததில் ஆரோக்கியமான 45 இளம் நபர்களுக்கு இந்த நோயிருந்ததாக எடுத்துக் கூறினர்.[9] PCS in American children has been discussed by Pickering in 1981[10] அமெரிக்க குழந்தைகளுக்கு இருந்த இநோய்க்குறியைப் பற்றி 1981 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் பிக்கரிங் மற்றும் ரெனால்ட்சு ஆகியோர் விவரித்துள்ளனர்[11]..

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 Gumbiner CH (January 2003). "Precordial catch syndrome". Southern Medical Journal 96 (1): 38–41. doi:10.1097/00007611-200301000-00011. பப்மெட்:12602711. https://archive.org/details/sim_southern-medical-journal_2003-01_96_1/page/38. 
 2. 2.0 2.1 2.2 2.3 McMorran, Jim. "Precordial catch syndrome (PCS)". General Practice Notebook (ஆங்கிலம்). 2 January 2018 அன்று பார்க்கப்பட்டது.
 3. Huchard, Henri (1844-1910) Auteur du texte (9 May 1893). "Traité clinique des maladies du coeur et des vaisseaux, par Henri Huchard,... Leçons de clinique et de thérapeutique, les cardiopathies artérielles, maladies de l'hypertension artérielle, maladies de l'hypertension artérielle, artério-sclérose généralisée, cardio-sclérose, aortites, angine de poitrine. 2e édition, entièrement remaniée" – gallica.bnf.fr வழியாக.
 4. Lefert, Paul (18-19 ) Auteur du texte. "Manuel du médecin praticien.... La pratique des maladies du coeur et de l'appareil circulatoire dans les hôpitaux de Paris, aide-mémoire et formulaire de thérapeutique appliquée / par le professeur Paul Lefert,..." – gallica.bnf.fr வழியாக.
 5. Huchard, H. (Henri) (9 May 1899). "Traité clinique des maladies du coeur et de l'aorte". Paris, Doin – Internet Archive வழியாக.
 6. 6.0 6.1 "précordialgie". Centre National de Ressources Textuelles et Lexicales.
 7. "praecordia" பரணிடப்பட்டது 2017-09-23 at the வந்தவழி இயந்திரம். Oxford Dictionaries.
 8. Miller, A.J.; Texidor, T.A. (December 1955). "Precordial catch, a neglected syndrome of precordial pain". Journal of the American Medical Association 159 (14): 1364–5. doi:10.1001/jama.1955.02960310028012a. பப்மெட்:13271083. 
 9. "'Precordial catch': a benign syndrome of chest pain in young persons". The New Zealand Medical Journal 88 (622): 325–6. October 1978. பப்மெட்:282484. 
 10. Pickering D (May 1981). "Precordial catch syndrome". Archives of Disease in Childhood 56 (5): 401–3. doi:10.1136/adc.56.5.401. பப்மெட்:7259265. 
 11. Reynolds JL (October 1989). "Precordial catch syndrome in children". Southern Medical Journal 82 (10): 1228–30. doi:10.1097/00007611-198910000-00007. பப்மெட்:2678498. https://archive.org/details/sim_southern-medical-journal_1989-10_82_10/page/1228. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்மார்பு_குத்தல்&oldid=3530717" இருந்து மீள்விக்கப்பட்டது