முன்னொட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

[1]முன்னொட்டு ஒரு மொழியில் காணப்படும் ஒவ்வொரு சொல்லும் பொருள் நிறைந்தது. பொருள், இலக்கணப்பொருள்(Grammatical Meaning)

சொற்பொருள்(Lexical Meaning) என இரு வகைப்படும். ஒரே சொல்லில் இரு பொருளும் அமைந்திருப்பதையும் காணலாம். எடுத்துக்காட்டாக, மரத்தை என்னும் சொல் மரம் என்பது சொற்பொருளையும், ஐ என்பது இலக்கணப்பொருளையும் கொண்டது.சொற்பொருள் அல்லது இலக்கணப்பொருள் நிறைந்த ஒரு மிகச்சிறிய கூறு உருபன் என்று சொல்லப்படுகிறது. மரத்தை என்னும் சொல்லில், மரம் என்பது, ஓர் உருபன். ஐ என்பது, ஓர் உருபன். முந்தியது ஒரு முழுமையான சொல், தனித்தியங்கவல்லது. பிந்தியது சொல்லின் பகுதியாக வருவது, தனித்து இயங்க இயலாதது.

  1. வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி பதினான்கு தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், சூலை 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னொட்டு&oldid=2355005" இருந்து மீள்விக்கப்பட்டது