உள்ளடக்கத்துக்குச் செல்

முன்னின்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்டின் வேன் மேலின் பிரான்சியான் 15 என்ற ஓவியம் - முன்னிம்பச் செய்கைகளில் ஈடுபடும் ஒரு இணையர்

முன்னின்பம் அல்லது புறத்தொழில்[1] (Foreplay) என்பது மனித குல பாலுறவு செய்கைகளில் தன்னுடன் பாலுறவு கொள்ளும் எதிர்பாலினரை உறவிற்கு தயார் செய்யும் வகையில் மனரீதியாகவோ உடல் ரீதியாகவோ தனது உள்ளார்ந்த ஆவலை வெளிப்படுத்தும் செயல்களை புரிவது ஆகும். இதில் ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ தனது உள்ள வெளிப்பாட்டை துவக்கலாம். சரசமானது உறவுக்கு தயாராகும் இருவரிடையே தனது ஆவலை வெளிபடுத்தவும் தனது எதிர்பாலினரிடம் நம்பகமான நபராக தன்னை கட்டிக்கொள்ளவும், இவற்றை தொன்று தொட்டே மனிதகுலம் செய்து வருகிறது. இந்த சரசம் என்பது மனிதரில் மட்டுமன்றி பல்வேறு விலங்குகளிடமும் கூட காணப்படுகிறது. இந்த முன்னின்ப செய்கைகள் அவரவர் தனிப்பட்ட விருப்பங்களை பொறுத்தமையால் அது நபருக்கு நபர் வேறுபடும். வடமொழி காம இலக்கியத்தைத்தழுவி அதிவீரராம பாண்டியனால் தமிழில் இயற்றப்பெற்ற கொக்கோகம் எனும் நூலில் புறத்தொழில் பலவற்றை விவரித்துள்ளார். ஒரு எடுத்துக்காட்டு பின்வரும்பாடல்:[2]

நலம்பெறு நாபி தன்னை
நாவினால் விரலால் சுற்றல்
பலம்பெறும் அல்குல் தன்னில்
கரிகர லீலை பண்ணிப்
பொலம்பெறு மணிசு வைத்தல்
கைம்முழந் தாள்பு றந்தாள்
கலம்புனை பரடு காலின்
விரல்கையாற் பிசைந்து கோடல்

முன்னின்பம் தொடங்குதல்[தொகு]

காம இச்சையைத் தூண்டக்கூடிய முத்தமிடல், தொடுதல், தழுவல், எதிர்பாலினரை மெதுவாக கடித்தலும் கூட முன்னின்பம் என்றே பொருள் கொள்ளப்படும். இது தவிர Flirt எனப்படும் காதல் சரச அசைவுகள், மற்றும் பேச்சுகள், மெல்ல காதருகில் பேசுதல் அல்லது முனங்குதல், மற்றும் கேலி செய்தல் போன்ற எண்ண அலைகள் கூட பாலுறவை முன்னடத்தி செல்ல காரணமாகின்றதனால் இவற்றையும் முன்னின்பம் என்றே கொள்ளலாம்.

தொடுதல், முத்தமிடல் போன்ற உடல் ஸ்பரிசங்கள் இல்லாமல் தனது காம ஆசையை சமிக்ஞைகளின் மூலம் வெளிப்படுத்துடலும் கூட முன்னின்பம் ஆகும். நிர்வாணமும் கூட காம ஆசையை மனதில் விதைப்பதனால் தன்னுடன் காமத்தில் இணையும் இணையின் ஆடைகளை கலைவதுமோ அல்லது அரைகுறை ஆடைகளை அணிவதுமோ கூட முன்னின்பம் ஆகும். உடலின் காம உணர்வு மிகுந்த பாகங்களை கைகளாலோ உதடு, நாக்கு, பல் போன்ற உறுப்புகளால் தொடுவது கூட முன்னின்பமெனப்படும். உதடு, மார்பு, வயிறு, பிட்டம், முதுகு, முன்புற அல்லது உள்தொடை போன்ற இடங்களில் முத்தமிடலும் நாவினால் நக்குதலும் முன்னின்ப வரையறையில் வருகிறது. பிரஞ்சு முத்தம் என்றறியப்படும் உதட்டிலும் வாயிலும் நாவிலும் முத்தமிடுவது மட்டுமே பொதுவான முன்னின்பமாக இருந்துவருகிறது.

புகழ்வது, விடுகதை அல்லது புதிர் போடுவது அல்லது இரட்டை அர்த்த வாசகங்களை பேசுவது அல்லது நெருங்கிய பேச்சுகள் போன்றவை வாய்வழி முன்னின்பமாகவும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பெற்ற மிடுக்கு தோரணை காட்டுதல், அலங்கார சமிக்ஞை, கண்சிமிட்டுதல், உதட்டை நக்குதல் மற்றும் கடித்தல், மற்றும் கண்ணால் சைகை செய்தல் போன்றவை உடல்வழி முன்னின்பமாகவும் பொருள்படும்.

இதுபோன்ற முன்னின்பங்களில் பல்வேறு காரணிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. துர்நாற்றமுடைய சுவாசமும், உடல் நாற்றமும், அதிகப்படியான சப்தமும், அல்லது எதிர்பாலினரின் முந்தைய துணையை நினைவுபடுத்தும் வகையில் நடப்பதும் கூட இவற்றில் அடங்கும். மேலும் ஒவ்வொருவரது தனிப்பட்ட ஆர்வமும் இதில் பெரும் பங்குவகிக்கும்.[சான்று தேவை]

முன்னின்ப விளையாட்டுகள்[தொகு]

வீட்டினுள்ளோ அல்லது வெளியிடத்திலோ தனது இணையின் ஆடைகளை அணிந்து கொண்டு தனது இணையை போல பாவனை செய்யும் காமம் குறித்த பாத்திரம் ஏற்று நடத்தல் அல்லது காமம் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் காம இச்சையை உருவாக்குகின்றன. ஒரு இணையில் ஒருவர் காரிய நிமித்தம் வேலையில் இருந்தபோதும் மற்றொருவர் இந்த முன்னின்ப விளையாட்டை முதலில் துவக்கலாம். இது தனது எண்ணக்கிடக்கையை தனது இணையிடம் வெளிப்படுத்தும் செய்கை ஆகும், அலைபேசிகளில் பரிமாறிக்கொள்ளபடும் காம குறுந்தகவல்களும் கூட இவ்வகையை சேர்ந்தவையாகும். இணைய அரட்டையிலும் கருத்துப் பரிமாற்றத்திலும் கூட இவ்வகை சரசம் மேற்கொள்ளப்படுகிறது.

சீட்டு விளையாட்டு அல்லது சதுரங்கம் போன்ற பலகை விளையாட்டுகளும் கூட முன்னின்பத்திற்கு வழிவகுக்கும். மென்மையான சுற்று சூழலும் இனிமையான இசையும் மெழுகுவர்த்தியும் சில பானங்களும் புலனுகர்வு உணவும் கூட அவ்வாறான தருணத்தை வரவழைக்கவல்லது. இதுபோன்ற விளையாட்டுகளில் பெரும்பாலும் வென்றவர் வேண்டுவன எவற்றையும் தோற்றவர் செய்ய வேண்டும் என்பதே போட்டிகளின் பந்தயமாயிருக்கும்.

மேலும் சில இணைகள் காம உணர்வை தூண்டக்கூடிய திரைப்படங்களை பார்ப்பதைக்கூட பழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் சிலர் பாலுறவில் தடுத்தல் மற்றும் வலி ஏற்படுத்தக்கூடிய விளையாட்டுகள், மற்றும் BDSM எனப்படும் கொடுமைப்படுத்தப்படும் ஒருவகை காம விளையாட்டும் கூட முன்னின்பம் என்கின்றனர்.[சான்று தேவை]

தாந்திரீக முன்னின்பம்[தொகு]

தாந்திரீக முன்னின்பம் என்பது சல்லாபத்தில் முதல் நிலையாகும். சமசுககிருதத்தின் தந்திர விளக்கவுரையின்படிக்கு அமைந்த சரச விளையாட்டே தாந்திரீக முன்னின்பம் என அழைக்கப்படுகிறது. இந்த விளக்கத்தின் படிக்கு உறவில் இருக்கும் இருவரது உடலும் மனதும் ஒருங்கிணைந்து பிரபஞ்சத்தில் கலந்த உணர்வை உருவாக்குதல் ஆகும். இந்த விளக்கத்தின் படி முன்னின்பம் என்பது உடலுறவுக்கு முந்தையதாக கண்டிப்பாக செய்யப்படும் செயலாகும். இந்த விளக்கத்தின் படி தெய்வீக உணர்வுடன் பிணைந்து ஒருவரது கால்கள் மற்றொருவரது கால்களுடன் குறுக்காக பின்னி ஒருவரை ஒருவர் பார்த்தாலும் தொடுதலும் இருக்கும் பொழுது, முன்னின்பத்தில் ஈடுபடுதல் ஆகும். தாந்திரீக முன்னின்பம் என்பதில் தசைகளை பிசைந்து கொடுத்தாலும் ஒரு வகை ஆகும்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. கவிஞர் பத்மதேவன் (2010). அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும். சென்னை: கற்பகம் புத்தகாலயம். p. 82. புறத்தொழில் - முத்தமிடுதல், தடவுதல், நகக்குறிபதித்தல் முதலியன
  2. கவிஞர் பத்மதேவன் (2010). அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும். சென்னை: கற்பகம் புத்தகாலயம். p. 98.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னின்பம்&oldid=3711396" இலிருந்து மீள்விக்கப்பட்டது