முன்னாவல்கோட்டை

ஆள்கூறுகள்: 10°45′25″N 79°22′14″E / 10.756866°N 79.370650°E / 10.756866; 79.370650
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன்னாவல்கோட்டை
கிராமம்
அடைபெயர்(கள்): முன்னை
முன்னாவல்கோட்டை is located in தமிழ் நாடு
முன்னாவல்கோட்டை
முன்னாவல்கோட்டை
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 10°45′25″N 79°22′14″E / 10.756866°N 79.370650°E / 10.756866; 79.370650
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவாரூர்
வட்டம் (தாலுகா)நீடாமங்கலம்
ஏற்றம்28 m (92 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்947
மொழிகள்
 • அதிகாரபூர்வ மொழிகள்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்614403
தொலைபேசி குறியீடு04367
வாகனப் பதிவுடி.என்-50

முன்னாவல்கோட்டை (Munnavalkottai) என்னும் கிராமம், இந்திய நாட்டின், தமிழ்நாடு மாநிலத்தின், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ளது.

புவியியல் அமைப்பு[தொகு]

முன்னாவல் கோட்டையின் முகப்பின் அளவு 28 மீட்டர் ஆகும். மேற்கில்  7 கிலோமீட்டர் தொலைவில் நீடாமங்கலமும்,  வடக்கில் 19 கிலோமீட்டர்  தொலைவில் மன்னார்குடியும், தெற்கில் 31 கிலோமீட்டர் தொலைவில் கும்பகோணமும்,  கிழக்கில் தஞ்சாவூரும்மேற்கில் 36 கிலோமீட்டர் தொலைவில் திருவாரூரும் எல்லைகளாக உள்ளன.

[[திருவாரூர்], தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லையில் இவ்வூர் அமைந்துள்ளது.  மேலும், இங்குக் கிளை அஞ்சலகம் ஒன்று காணப்படுகிறது. [1][2]  இவ்வூர் கோவில்வெண்ணி துணை அஞ்சலகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. முன்னாவல்கோட்டையைச் சுற்றி கிழக்கில் கொரடாச்சேரி, மேற்கில் அம்மாப்பேட்டை, வடக்கில் குடவாசல், தெற்கில் மன்னார்குடி ஆகிய வட்டங்கள் அமையப்பெற்றுள்ளன. 

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, முன்னாவல்கோட்டை கிராமத்தின் மொத்த மக்கள்தொகையின் எண்ணிக்கை 947 ஆகும். இதில் ஆண்கள் 48 விழுக்காட்டினர் ஆவர். பெண்கள் 52 விழுக்காட்டினர் ஆவர். இக்கிராமத்தின் எழுத்தறிவு சராசரி அளவு 72% ஆகும். ஆண்கள் எழுத்தறிவு விகிதம் 79% ஆகவும் பெண்கள் எழுத்தறிவு விகிதம் 65% ஆகவும் உள்ளது. அதுபோல், 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகையில் ஆறு வயதிற்கு கீழுள்ளோர் பத்து விழுக்காட்டினராகக் காணப்படுகின்றனர்.[3]

பள்ளிகள்[தொகு]

  • அரசு மேனிலைப் பள்ளி, முன்னாவல்கோட்டை.[4]
  • ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி

கோவில்கள்[தொகு]

அரசியல்[தொகு]

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில்[4] முன்னாவல்கோட்டை உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian Post Office: Munnavalkottai".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Post Office Details: Munnavalkottai". Archived from the original on 2016-11-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
  3. "Census 2011 Population Finder: Tamil Nadu: Thiruvarur: Munnaval Kottai". Office of The Registrar General & Census Commissioner, Ministry of Home Affairs, Government of India.
  4. 4.0 4.1 "Elections Booth: Govt High School: Munnavalkottai" (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Dinamalar Temples list in Thanjavur Dt".
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னாவல்கோட்டை&oldid=3872803" இலிருந்து மீள்விக்கப்பட்டது