முனைவர் கே. கே. முகமது கோயா கடல் வெள்ளரி பாதுகாப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் கே. கே. முகமது கோயா கடல் வெள்ளரி பாதுகாப்பகம் (Dr KK Mohammed Koya Sea Cucumber Conservation Reserve) என்பது உலகின் முதல் கடல் வெள்ளரி பாதுகாப்பு பகுதியாகும்.[1] இது இந்திய ஒன்றிய பிரதேசமான இலட்சத்தீவில் உள்ள செரியபாணி பவளப்பாறைத் திட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. 2020இல் உருவாக்கப்பட்டது இந்த பாதுகாப்பகம் 239 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது.

இந்தியாவில், 1972ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 1இன் கீழ் கடல் வெள்ளரி பாதுகாக்கப்படுகிறது. இதன்படி கடல் வெள்ளரிகளை வணிக பயன்பாட்டிற்குக் கொண்டு செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டில், இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடல் வெள்ளரிகளை வணிக ரீதியாக அறுவடை செய்வதற்கும் தடை விதித்தது.[1] [2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]