முனைய துணைக்கோள் ஏவுகலம் - சி42

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிஎஸ்எல்வி-சி42
PSLV C-42 at the Sriharikota Launching Range
திட்ட வகை2 செயற்கைக்கோள்களை விண்வெளிப்பாதையில் நிலைநிறுத்துதல்
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இணையதளம்இந்திய விண்வெளி ஆய்வு மைய இணையத்தளம்
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்முனைய துணைக்கோள் ஏவுகலம்
விண்கல வகைமீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏவல் திணிவு230400 கிகி
ஏற்புச்சுமை-நிறை889கிகி
பரிமாணங்கள்44.4 மீ
(overall height)
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்10:08:00, 16 செப்டம்பர் 2018 (2018-09-16T10:08:00) (இந்திய சீர் நேரம்)
ஏவுகலன்முனைய துணைக்கோள் ஏவுகலம்
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மைய முதல் ஏவுதளம்
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
Payload
திணிவு889 கிகி
----
Polar Satellite Launch Vehicle missions
← PSLV-C41 PSLV-C43

முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி42 (PSLV-C42) இந்திய முனைய துணைக்கோள் ஏவுகல வரிசையில் 44ஆவது ஏவுதல் ஆகும். இங்கிலாந்தைச் சேர்ந்த நோவா எஸ் ஏ ஆர் மற்றும் எஸ்1- 4 ஆகிய இரு புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்களையும் வணிக நோக்கில் இந்தியா விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் ஆந்திரப்பிரதேசம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவுதளத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று இந்த ஏவுகலம் துணைக்கோள்களுடன் விண்வெளியில் செலுத்தப்பட்டது.[1]இந்த ஏவுகலம் சுமார் 44.4 மீட்டர் உயரமும், 230.4 டன் எடையும் கொண்டது ஆகும். இந்த ஏவுகலம் சுமந்து செல்லும் நோவா எஸ் ஏ ஆர் செயற்கைக்கோள் வெள்ளம் மற்றும் இயற்கைப் பேரிடர்களைக் கண்காணிக்கும் விதமாகவும், எஸ்1- 4 செயற்கைக்கோள் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலைக் கண்காணிக்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.[2] இந்த செயற்கைக் கோள்கள் பூமியிலிருந்து 583 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டன. இந்த ஏவுகலமானது, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் ஆய்வு மையத்தால் வடிவமைக்கப்பட்டது. இந்த ஏவுகலமானது, நான்கு நிலைகளைக் கொண்டுள்ளதாக இருந்துள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dinamalar.com/news_detail.asp?id=2102794
  2. https://www.vikatan.com/news/india/137058-the-33hour-countdown-for-the-launch-of-two-earth-observation-satellites-onboard-pslv.html
  3. https://www.isro.gov.in/update/16-sep-2018/pslv-c42-launches-2-foreign-satellites