முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி2
PSLV.svg
மாதிரி முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி2
திட்ட வகைமூன்று துணைக்கோள்கள் அமர்வு
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இணையதளம்ISRO website
திட்டக் காலம்1117.5 நொடிகள்
புவி உச்சநிலை735.1 கிலோமீட்டர்கள் (457 mi)
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்முனைய துணைக்கோள் ஏவுகலம்
விண்கல வகைமீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏவல் திணிவு294,000 கிலோகிராம்கள் (648,000 lb)
ஏற்புச்சுமை-நிறை1,202 கிலோகிராம்கள் (2,650 lb)
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்11:52:00, மே 26, 1999 (IST) (1999-05-26T11:52:00IST) (இசீநே)
ஏவுகலன்முனைய துணைக்கோள் ஏவுகலம்
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
திட்ட முடிவு
முடக்கம்26 மே,1999
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemசூரியவிணக்கப் பாதை
சுற்றுவெளிதாழ்-புவி சுற்றுப்பாதை
----
முனைய துணைக்கோள் ஏவுகலம்
← முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி1 முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி3

முனைய துணைக்கோள் ஏவுகலம் -சி2 (PSLV-C2 ) என்பது முனைய துணைக்கோள் ஏவுகலத் திட்டத்தின் ஐந்தாவது ஏவுதல் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மூலம் ஏவப்பட்ட 32 ஆவது ஏவுகலம் ஆகும். இதன் முதல் ஏவுகலம் சனவரி 1, 1962 இல் ஏவப்பட்டது. இந்த ஏவுகலத்தில் சூரியவிணக்கப் பாதையில் அமர்த்தக்கூடிய மூன்று செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது.[1][2][3][4][5]

இந்த ஏவுகலத்தில் இந்தியாவின் முதல் இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோளான இந்திய தொலை உணர்வு செயற்கைகைக்கோள்- பி4 செயற்கைக்கோளினை முதன்மை தாங்கு சுமையாக கொண்டு சென்றது. மேலும் இதனுடன் கொரியாவின் கிட்சாட்-3 மற்றும் ஜெர்மனி நாட்டின் டிஎல்ஆர் -டப்சட் போன்றவற்றை துணை தாங்குசுமைகளாக தாங்கிச்சென்றது.[6] இதுவே இந்தியாவின் மீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு ஆகும். இதுவே ஒரு திட்டத்தின் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில்செலுத்துவது இதுவே முதல்முறையாகும். இதுவே இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான விண்வெளிப் பறப்பு ஆகும். இதற்காக தென் கொரியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு தலா 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளித்தது.[7][8]

திட்டத்தின் அளவுருக்கள்[தொகு]

 • நிறை:
  • மொத்த எடை இழப்பு: 294000 கிலோகிராம் (648,000 lb)
  • மொத்த பொருட்களின் எடை: 1,202 கிலோகிராம் (2,650 lb)
 • ஒட்டுமொத்த உயரம்: 44.4 மீட்டர் (145.7 அடி)
 • எரிபொருள்:
  • நிலை 1: திட HTPB அடிப்படையிலானது (138.0 + 54 டன்)
  • நிலை 2: திரவ UDMH + N2O4 (4.06 டன்)
  • நிலை 3: திட HTPB அடிப்படையிலானது (7.2 டன்)
  • நிலை 4: திரவ MMH + N2O4 (2.0 டன்

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]