உள்ளடக்கத்துக்குச் செல்

முனியர் சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனியர் சவுத்ரி
முனியர் சவுத்ரி மற்றும் அவரது மனைவி, 1950
தாய்மொழியில் பெயர்মুনীর চৌধুরী
பிறப்பு(1925-11-27)27 நவம்பர் 1925
மணிகஞ்ச் மாவட்டம், வங்காளம், பிரித்தானிய இந்தியா
இறப்பு14 திசம்பர் 1971(1971-12-14) (அகவை 46)
தேசியம்வங்காள தேசம்
கல்விமுதுகலை
படித்த கல்வி நிறுவனங்கள்அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்
தாக்கா பல்கலைக்கழகம்
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

முனியர் சவுத்ரி (27 நவம்பர் 1925 - 14 டிசம்பர் 1971) வங்காளதேசத்தைச் கல்வியாளர், நாடக ஆசிரியர், இலக்கிய விமர்சகர் ஆவார்.[1] 1971 ஆம் ஆண்டு வங்காள அறிவாளிகள் படுகொலை செய்யப்பட்டதில் பலியானார். இவருக்கு 1980 ஆம் ஆண்டில் அவரது இறப்புக்கு பின்னர் சுதந்திர தின விருது வழங்கப்பட்டது.[2]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

சவுத்ரி 1925 ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று பிரித்தானிய இந்தியாவின் மணிகஞ்சில் பிறந்தார்.[1] இவரது தந்தை கான் பகதூர் அப்துல் ஹலீம் சவுத்ரி, மாவட்ட நீதவான் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பட்டதாரி ஆவார். சவுத்ரியின் தாயார் உம்மி கபீர் ஆஃபியா பேகம் (இறப்பு: 2000) ஆவார். [3]சவுத்ரி தனது தந்தையின் அலுவல் பணிகளின் காரணமாக மாணிக்கஞ்ச், பிரோஜ்பூர் மற்றும் கிழக்கு வங்கத்தின் பிற பகுதிகளில் வசித்து வந்தார். இவரது குடும்பம் 1936 ஆம் ஆண்டில் நிரந்தரமாக டாக்காவுக்குக் குடிபெயர்ந்தது. பின்னர் அவர் 14 உடன்பிறப்புகளுடன் அவரின் தாயாரின் பெயரால் பெயரிடப்பட்ட தாருல் ஆஃபியா என்ற இல்லத்தில் வளர்ந்தார்.[4] அவர் 1941 ஆம் ஆண்டில் டாக்கா கல்லூரிப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இடைநிலை தேர்வை முடித்தார்.[1]பின்னர் 1946 ஆம் ஆண்டில் இல் இளங்கலை பட்டமும் 1947 ஆம் ஆண்டில் டாக்கா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இடதுசாரி அரசியலில் அவர் ஈடுபட்டதால் அவர் குடியிருப்பான சலீமுல்லா ஹாலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.[5] வங்காள மொழி இயக்கத்தில் பங்கேற்றதற்காக 1952 ஆம் ஆண்டில் அவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 1954 ஆம் ஆண்டில் சிறையில் இருந்தபோது வங்காள இலக்கியத்தில் முதுகலை தேர்வு எழுதி முதல் வகுப்பில் முதலிடம் பெற்றார்.[6] பின்னர் 1958 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் தனது மூன்றாவது முதுகலைப் பட்டத்தை பெற்றார்.[1]

1947 ஆம் ஆண்டில், சவுத்ரி குல்னாவில் உள்ள பிரஜலால் கல்லூரியில் கற்பித்தல் பணியைத் தொடங்கினார்.[7] அவர் 1950 இல் டாக்காவில் உள்ள ஜகந்நாத் கல்லூரிக்குச் மாற்றலாகினார். மேலும் அதே ஆண்டில் டாக்கா பல்கலைக்கழகத்தில் இணைந்தார். 1971 ஆம் ஆண்டு வரை ஆங்கிலம் மற்றும் வங்காள மொழி துறைகளில் கற்பித்தார். 1970 ஆம் ஆண்டில் பேராசிரியராகவும், 1971 ஆம் ஆண்டில் இல் கலை பீடத்தின் தலைவராகவும் கடமையாற்றினார்.[8]

அரசியல் செயற்பாடுகள்

[தொகு]

சவுத்ரி இடதுசாரி அரசியல் மற்றும் முற்போக்கான கலாச்சார இயக்கங்களுடன் தொடர்புடையவர். 1948 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அவர் "பிரகதி லேகக் ஓ ஷில்பி சங்க" (முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்) செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1952 ஆம் ஆண்டில் காவல் துறையின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காகவும், மொழி இயக்கத்தில் மாணவர்களின் கொல்லப்பட்டதன் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 1967 ஆம் ஆண்டில் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் தாகூர் பாடல்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்ததை எதிர்த்தார். [1]1950 களின் முற்பகுதியில் வங்காள மொழி எழுத்துக்களை அரபு எழுத்துக்களினால் மாற்றுவதற்கான நடவடிக்கை பாகிஸ்தானினால் முன்னெடுக்கப்பட்டது. ஒரு மொழியியலாளராகவும் எழுத்தாளராகவும் சவுத்ரி கிழக்கு பாகிஸ்தானின் சொந்த மொழியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இந்த நடவடிக்கையை எதிர்த்தார். 1971 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் தீவிரமாக பங்கேற்றார். 1966 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சீதாரா-இ-இம்தியாஸ் விருதை நிராகரித்தார்.[1]

இலக்கிய படைப்புகள்

[தொகு]

1952-54ல் சிறைவாசம் அனுபவித்தபோது, கபர் என்ற வரலாற்று நாடகத்தை எழுதினார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் தொடர்ந்து எழுதினார். ரோக்டாக்டோ பிரான்டர் (1959; மூன்றாம் பானிபட் போரைப் பற்றிய ஒரு நாடகம்), சித்தி (1966) மற்றும் போலாஷி பராக் ஓ ஒன்னியானோ (1969) என்பன அவரது குறிப்பிடப்பட்ட படைப்புக்களாகும்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சவுத்ரி, லில்லி என்பவரை மணந்தார். இவர்களுக்கு அஹ்மத் முனியர், அஷ்பாக் முனியர் (மிஷுக்) மற்றும் ஆசிப் முனியர் ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்.[9]

விருதுகளும், மரியாதைகளும்

[தொகு]
 • வங்காள அகாதமி இலக்கிய விருது (1962)
 • தாவுத் பரிசு (1965)
 • சுதந்திர தின விருது (1980)
 • சீதாரா-இ-இம்தியாஸ் (1966 நிராகரித்தார்)

அச்சிடும் தரம் மற்றும் அழகியல் மதிப்புகளின் தகுதிக்காக புத்தக வெளியீட்டு நிறுவனங்களுக்கு ஷாஹீத் முனியர் சவுத்ரி நினைவு விருதை வங்காள அகாதமி வழங்குகிறது. சவுத்ரி வாழ்ந்த டாக்காவில் உள்ள மத்திய சாலை, ஷாஹீத் முனியர் சவுத்ரி சாலை என மறுபெயரிடப்பட்டது.[9] 1991 ஆம் ஆண்டில் வங்காளதேச சுதந்திரத்தின் 20 வது ஆண்டு நினைவு நாளில் அரசினால் சவுத்திரியின் நினைவாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிப்பட்டது.[5]

சான்றுகள்

[தொகு]
 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Chowdhury, Munier - Banglapedia". en.banglapedia.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.
 2. ""Independence Day Award" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 3. "The Daily Star Web Edition Vol. 5 Num 551". archive.thedailystar.net. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.
 4. "The Daily Star Web Edition Vol. 5 Num 551". archive.thedailystar.net. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.
 5. 5.0 5.1 5.2 "What We've Lost". The Daily Star (in ஆங்கிலம்). 2013-12-13. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.
 6. "intel". web.archive.org. 2013-06-18. Archived from the original on 2013-06-18. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 7. ""Shaheed Munier Chowdhury Remembered". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 8. "Martyred Intellectuals' Day Special". archive.thedailystar.net. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.
 9. 9.0 9.1 "Munier Chowdhury: Personal Glimpses". The Daily Star (in ஆங்கிலம்). 2016-11-26. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனியர்_சவுத்ரி&oldid=3484529" இலிருந்து மீள்விக்கப்பட்டது