முனிம் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனிம் கான் (Munim Khan) உமாயூன் மற்றும் அக்பர் பேரரசர்களின் கீழ் ஒரு முகலாயத் தளபதியாக இருந்தார். அக்பர் இவரை பிரதம அமைச்சராக நியமித்தபோது இவருக்கு கான்-இ-கானன் என்று பெயரிடப்பட்டது. [1] பின்னர் 1564 ஆம் ஆண்டு சுபாதார் (ஆளுநர்) என்ற பெருமையை பெற்றார். பின்னர் 1564 இல் அவர் ஜான்பூரின் சுபாதார் ஆனார். இவர் 1574-1575 காலங்களில் வங்காளம் மற்றும் பீகார் ஆளுநராகவும் பணியாற்றினார்.

தோற்றம்[தொகு]

இவரது மூதாதையர்கள் ஆண்டிஜான் (அப்போதைய தைமூரிய பேரரசு இன்றைய உஸ்பெகிஸ்தான் ) பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். [1] இவரது தந்தை மீரான் பேக் ஆண்டிஜானி என்பராவார்.

தாவூத் கான் கர்ரானிக்கு எதிரான பயணம்[தொகு]

வங்காள சுல்தான் தாவூத் கான் கர்ரானியை அடக்க அக்பர் முனிம் கானை அனுப்பினார். முதன் முயற்சியில் முற்றுகையிடத் தவறிய முனிம் கான், பேரரசர் அக்பரின் நேரடி முயற்சியின் கீழ் ஹாஜிபூர் மற்றும் பாட்னாவின் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக கைப்பற்றினார். பின்னர் முனிம் கான் வங்காளம் மற்றும் பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் வங்காளத்தின் தலைநகரான தந்தாவை 1574 செப்டம்பர் 15 அன்று கைப்பற்றினார். [1] 1575 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி நடைபெற்ற துக்காரோய் போரில், முனிம் கான் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு தாவூத் ஷாவை கட்டாயப்படுத்தினார். பின்னர் ஒரிசா மட்டுமே தாவூத் ஷாவின் கட்டுப்பாட்டில் விட்டு வைத்திருந்தது. முனிம் கான் தலைநகரை வங்காளத்திலிருந்து தந்தாவின் கௌருக்கு மாற்றினார்.

இறப்பு[தொகு]

முனிம் 15 அக்டோபர் 1575 15 அக்டோபர் அன்று தந்தாவில் ஒரு தொற்றுநோயால் இறந்தார். [1] இவரது மரணத்திற்குப் பிறகு, தாவூத் கான் கர்ரானி பின்வாங்கி மீண்டும் கவுரை கைப்பற்றினார்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Husain, AKM Yaqub (2012). "Munim Khan Khan-i-Khanan". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Munim_Khan_Khan-i-Khanan. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனிம்_கான்&oldid=2888238" இலிருந்து மீள்விக்கப்பட்டது