முனவர் கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனவர் கணவாய்

முனவர் கணவாய் (Munawar Pass) இந்திய காசுமீரின் பிர் பஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு மலைப்பாதையாகும். பிர் கி காலி கணவாய்க்கு வடக்கே முனவர் கணவாய் அமைந்துள்ளது. இங்கிருந்து ராயௌரி நகரத்தை நன்கு பார்க்கமுடியும். [1] 1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிப்ரால்டர் போர் நடவடிக்கையின் போது முனவர் கணவாய் சில கடுமையான சண்டைகளுக்கு சாட்சியம் அளித்தது. பாக்கித்தான் கொரில்லா படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கைக்கு படைத்துறைத் தலைவர் முனவர் அவான் தலைமை தாங்கினார். ராயௌரி நகர பாதுகாப்பு அரணையும் இவர் கைப்பற்றினார். [2] முனவரும் அவரது செயல்களும் இப்பகுதியில் ஒரு நாட்டுப்புறக் கதையாக மாறியது. கணவாய்க்கு உள்ளூர் மக்கள் முனவரின் பெயரைச் சூட்டினர். கணவாய்க்கான இப்பெயர் இன்று வரை தொடர்கிறது. உள்ளூர்மக்களைத் திரட்டிய முனவர் அவர்களை ஆயுதம் ஏந்தச்செய்து, இப்பிராந்தியம் முழுவதும் மறியல் செய்தார் கசனவி படையுடனான தீவிர நடவடிக்கைகள் காரணமாக உள்ளூர் இந்திய நிர்வாகம் இவரது தலைக்கு 1 இலட்சம் பணம் பரிசாக அறிவித்தது. இருப்பினும் முனவர் தனது படையினருடன் இந்தியர்களிடமிருந்து தப்பித்து 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தோ-பாக் போரின் தொடக்கத்தில் பாக்கித்தானுக்கு திரும்பினார். [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனவர்_கணவாய்&oldid=3225309" இலிருந்து மீள்விக்கப்பட்டது