முனம்பம்
Appearance
முனம்பம் (Munambam) என்பது இந்தியாவின் கேரளம் மாநிலத்தின் கொச்சியின் புறநகர்ப் பகுதியாகும்.[1] இது வைப்பீன் தீவின் வடக்கு முனையில் உள்ளது. மேற்கில் அரபிக் கடல், கிழக்கில் பெரியாறு மற்றும் வடக்கே அரபிக்கடலுடன் பெரியாறு கலக்கும் முகத்துவாரம் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் முதன்மைத் தொழில் மீன்பிடித்தல் ஆகும்.
முனம்பம் பகுதியில் முக்கிய மீன்பிடி துறைமுகம் இருப்பதால் எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் இப்பகுதி பிரபலமானதாக அறியப்படுகிறது.கேரள மாநிலத்தின் முக்கிய நதியான பெரியாற்றின் முகத்துவாரமும் முனம்பம் முசிரிசு கடற்கரையில் இருந்து பார்க்கக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]