முந்தேசுசுவரி கோயில்

ஆள்கூறுகள்: 24°59′00″N 83°33′53″E / 24.9833958°N 83.5646939°E / 24.9833958; 83.5646939
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முந்தேசுசுவரி கோயில்
Mundeshwari Temple
இந்து கோவிலின் நாகரா வகை கட்டமைப்பு
முந்தேசுசுவரி கோயில் is located in இந்தியா
முந்தேசுசுவரி கோயில்
பீகாரில் அமைவிடம்
முந்தேசுசுவரி கோயில் is located in பீகார்
முந்தேசுசுவரி கோயில்
முந்தேசுசுவரி கோயில் (பீகார்)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:பீகார்
மாவட்டம்:கைமூர் மாவட்டம்
அமைவு:கவுரா
ஏற்றம்:608 m (1,995 அடி)
ஆள்கூறுகள்:24°59′00″N 83°33′53″E / 24.9833958°N 83.5646939°E / 24.9833958; 83.5646939
கோயில் தகவல்கள்
இணையதளம்:http://maamundeshwari.org

முந்தேசுசுவரி தேவி கோயில் (The Mundeshwari Devi Temple) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இருக்கும் ஒரு கோவிலாகும். இம்மாநிலத்தின் கைமூர் மாவட்டத்தில் உள்ள கவுரா என்ற பகுதியில் இருக்கும் முந்தேசுவரி மலையில் இக்கோவில் அமைந்துள்ளது. இறைவன் சிவன் மற்றும் சக்தியை வழிபடும் புனித தலமாக அர்பணிக்கப் பட்டுள்ள இக்கோவில் இந்தியாவின் மிகவும் பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது[1][2][3]. பண்டைய காலத்திலிருந்து இன்றும் கூட செயல்பட்டுவரும் மிகப்பழமையான கோவில் என்றும் இதைக் கருதுகிறார்கள்[4][5]. இக்கோவில் கி.பி. 625 ஆம் ஆண்டு கட்டப்பட்டதென இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் அமைத்த தகவல்பலகை தெரிவிக்கிறது[6]. இதை உறுதிபடுத்தும் வகையில் கி.பி.625 ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் இக்கோவிலை ஒரு பழங்கால நினைவுச் சின்னமாக 1915 ஆம் ஆண்டு முதல் பாதுகாத்து வருகிறது.

புவியியல்[தொகு]

முந்தேசுவரி தேவி கோயில் முந்தேசுவரி மலையில் கடல் மட்டத்திலிருந்து 608 அடி (185 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது[1]. சோன் நதி மற்றும் நதிகளுக்கு அருகில் உள்ள கைமுர் பீடபூமியில் இத்தலம் உள்ளது. மேலும் பல்வேறு தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் முந்தேசுவரி மலையில் உள்ளன[7]

சென்றடையும் வழி[தொகு]

பாட்னா, கயா அல்லது வாரணாசி ஆகிய ஊர்களின் சாலை வழியாக முந்தேசுவரி கோவிலைச் சென்றடைய முடியும். மோகனியா-பாபுவா சாலை இரயில் நிலையம் கோயிலுக்கு அருகில் உள்ள இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவை சாலை வழியாகக் கடந்து கோயிலை அடையலாம். வாரணாசி நகரத்திலுள்ள லால் பகதூர் சாசுத்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம், இக்கோயிலுக்கு மிக அருகிலுள்ள விமான நிலையமாகும். இவ்விமான நிலையம் கோயிலிலிருந்து 102 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஏர் இந்தியா விமானம், சிபைசுசெட் விமானம் போன்ற உள் நாட்டுச் சேவை விமானங்களும், ஏர் இந்தியா விமானம், தாய்லாந்து ஏர் வேசு , கொரியன் ஏர் வேசு, நாசு ஏர் லைன் போன்ற பன்னாட்டு விமானங்களும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Alphabetical List of Monuments – Bihar". Serial number 62. Archaeological Survey of India.
  2. "BSBRT to renovate Mundeshwari temple". Times of India. 1 சனவரி 2011 இம் மூலத்தில் இருந்து 2012-06-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120614053655/http://articles.timesofindia.indiatimes.com/2008-01-01/patna/27781342_1_mundeshwari-bsbrt-asi. பார்த்த நாள்: 2 சூன் 2011. 
  3. "Ma Mundeshwari Temple in Kaimur ,Bihar". Hindu Temples. Archived from the original on 2018-11-09. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2011.
  4. "Film on 'oldest' surviving temple of Gupta Age". The Times Of India. 12 சூன் 2011 இம் மூலத்தில் இருந்து 2011-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111105052617/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-12/patna/29649899_1_temple-site-film-ancient-structure. 
  5. "Bihar to develop 'oldest' temple". The Times Of India. 18 சனவரி 2008 இம் மூலத்தில் இருந்து 2012-09-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120913042742/http://articles.timesofindia.indiatimes.com/2008-01-18/patna/27760152_1_temple-inscriptions-vaishno-devi. 
  6. Sajnani, Manohar (2001) (in en). Encyclopaedia of Tourism Resources in India. Gyan Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788178350172. https://books.google.com/books?id=vdMNBxOsvrUC&pg=PA40. 
  7. L.S.S. O`malley (2005). Bihar And Orissa Gazetteers Shahabad. Concept Publishing Company. பக். 36, 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7268-122-7. https://books.google.com/books?id=iftaR6DVxIAC&pg=PR1. பார்த்த நாள்: 4 சூன் 2011. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முந்தேசுசுவரி_கோயில்&oldid=3791676" இலிருந்து மீள்விக்கப்பட்டது