உள்ளடக்கத்துக்குச் செல்

முந்திரி கொத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முந்திரி கொத்து
முந்திரி கொத்து
மாற்றுப் பெயர்கள்பயற்றம்பணியாரம்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிகன்னியாகுமரி மாவட்டம்

முந்திரி கொத்து ஒருவகை சிற்றுண்டி உணவாகும். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்புப் பெற்ற சிற்றுண்டி வகையாகும். பச்சை பயிர், பாகு வெல்லம், எள்ளு, தேங்காய் துருவல், ஏலக்காய், மைதா, அரிசி மாவு, மஞ்சள் தூள், எண்ணெய் ஆகிய பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இதே மாதிரியான இனிப்பு வகையை சிறிய மாற்றங்களுடன் யாழ்ப்பாணத்திலும் செய்வார்கள். இதற்கு பெயர் பயற்றம் பணியாரம். மண்டை வெல்லத்திற்குப் பதிலாக வெல்லம்/சீனி சேர்ப்பார்கள். வாசனைக்கு ஏலத்துடன் லேசாக வறுத்த சீரகம்+ மிளகு பொடி செய்து சேர்க்கப்படும்.

செய்முறை[தொகு]

தோல் நீக்கப்பட்ட சிறுபயறு (பாசிப்பருப்பு) நன்கு காயவைக்கப்பட்டு, உதிரி மாவாக அரைக்கப்படும். ஈரப்பதம் நீங்க இலேசாக வறுத்து எடுக்கப்படும். தேங்காய், துருவலாக்கப்பட்டு, ஈரப்பதம் நீங்க வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுக்கப்படும். மேலும், தேங்காய், பூ பிழிந்து பால் தனியாக எடுக்கப்படும். கருப்புக்கட்டி காய்ச்சி பாகுவாக வைத்துக் கொள்ளப்படும். வறுத்த சிறுபயறு மாவு, வறுத்து எடுக்கப்பட்ட தேங்காய்ப் பூவுடன் கலக்கப்படும். சிறிது வறுத்து எடுக்கப்பட்ட கறுப்பு எள், ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி, கருப்புக்கட்டி பாகு மற்றும் தேங்காய்ப் பால் (தேங்காய், துருவலாக சேர்க்கப்படுவதால், தேங்காய்ப் பால் கலப்பதைத் தவிர்க்கலாம்) ஆகியவை இக்கலவையுடன் சேர்க்கப்பட்டு, மாவு கட்டியாகி, உருண்டை பிடிக்கும் பக்குவம் வரும் வரை கலக்கப்படும். பிறகு உருண்டை பிடித்து, சில நாட்கள் பாதுகாப்பாக, அறையில் உலர (காய) வைக்கப்படும். உலர்ந்த பின், சிறிது சமையல் மஞ்சள் தூள் கலந்த மைதா மாவு கரைசலில் முக்கி கொதிக்கும் எண்ணெயில் போட்டு எடுக்கப்படும்.

வெளியிணைப்புகள்[தொகு]

முந்தரிக்கொத்து தயாரிக்கும் முறை பரணிடப்பட்டது 2015-01-23 at the வந்தவழி இயந்திரம்
முந்தரிக்கொத்து செய்முறை

"https://ta.wikipedia.org/w/index.php?title=முந்திரி_கொத்து&oldid=3717425" இலிருந்து மீள்விக்கப்பட்டது