உள்ளடக்கத்துக்குச் செல்

முத்து பழனியப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்து பழனியப்பன்
M Muthu Palaniappan
நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர்
ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1986–1995
முன்னையவர் இசுமாயில் லெபாய்
பின்னவர் அம்டான் முகமட்
நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர்
சிருசா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1982–1986
முன்னையவர் ஆ. பொன்னையா (1974–1978)
பின்னவர் கிருஷ்ணசாமி முத்துராஜு (1986–1990)
மலேசிய மேலவை உறுப்பினர்
பதவியில்
15 திசம்பர் 1980 – 1982
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Muthupalaniappan a/l Muthu Raman

1940 (வயது 84)
இறப்பு1 மார்ச் 2024[1][2]
பந்தாய் மருத்துவமனை, கோலாலம்பூர்
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சி பிகேஆர் (PKR) (2012-க்கு பின்னர்)
மஇகா (MIC) (2012 வரையில்)

டத்தோ முத்து பழனியப்பன் எனும் முத்து பழனியப்பன் முத்துராமன் (ஆங்கிலம்; மலாய்: M Muthu Palaniappan) (1940 - 2024) என்பவர் மலேசிய அரசியல்வாதி; நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில், 1982 முதல் 1986 வரை சிருசா சட்டமன்றத் தொகுதி; 1986 முதல் 1995 வரை ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி (இரு தவணைகள்); 15 திசம்பர் 1980 முதல் 1982 வரை மலேசிய மேலவை உறுப்பினர் பதவிகளை வகித்தவர் ஆவார்.[3]

மேலும் முத்து பழனியப்பன் முத்துராமன் அவர்கள் நெகிரி செம்பிலான் மஇகா மாநில தலைவர்; மஇகாவின் தேசிய உதவித் தலைவர்; மஇகாவின் இளைஞர் பிரிவு தலைவர்; நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் (மாநில அமைச்சர்) பதவிகளை வகித்தவரும் ஆவார்.

அரசியல்

[தொகு]

பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் உறுப்புக் கட்சியான பிகேஆர் (PKR) கட்சியில் சேர்ந்த பிறகு, 2014 முதல் 2018 வரை தெலுக் கெமாங் பிகேஆர் கிளையின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மஇகா

[தொகு]

முத்துபழனியப்பன் 1997 முதல் 2000 வரை மஇகாவின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[4][5] அவர் அதற்கு முன்னர் 1979-இல் மஇகா மத்திய செயற்குழுவின் உறுப்பினராத் தேர்வு செய்யப்பட்டார். அவர் பிகேஆர் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 30, 2012-இல் அவரின் மஇகா உறுப்பினர் பதவி[6]. நீக்கம் செய்யப்பட்டது.

மே 2009-இல் நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தலில் ச. சாமிவேலுவை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அறிவித்ததை அடுத்து, சனவரி 24, 2009 அன்று, அவர் மஇகா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்[7]. இருப்பினும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்தார். பின்னர் நடைபெற்ற மே 2009 மஇகா கட்சித் தேர்தலில், அவர் அப்போதைய தலைவர் ச. சாமிவேலுவிடம் தோல்வியடைந்தார்.

விருதுகள்

[தொகு]

காணொளி

[தொகு]

டத்தோ முத்து பழனியப்பன் இறப்பு தொடபர்பான காணொளி:

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dato Muthupalaniappan passes away in Seremban". V S Param Hevan's post - facebook. Retrieved 16 February 2026.
  2. "1/03/2024: MIC's former Exco Muthu Palaniappan passed away". youtube. 1 March 2024. Retrieved 16 February 2026.
  3. "Tindakan UMNO BN Tidak Bertanding PRK Penanti Ditentang Samy Vellu". GreenBoc. 18 April 2009. Retrieved 22 December 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. "Mahalingam gagal pertahan jawatan" (PDF). Perdana. 3 August 1997. Retrieved 22 December 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. "Bekas Naib Presiden mahu cabar Samy Vellu". mStar. 11 November 2008. Retrieved 22 December 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. Bernama (April 29, 2012). "Muthu Palaniappan's Name Struck Off From MIC List" (PDF). Perdana. Retrieved 22 December 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. G. MANIMARAN (24 January 2009). "Bekas Naib Presiden MIC berhasrat cabar Samy Vellu dipecat". mStar. Retrieved 22 December 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்து_பழனியப்பன்&oldid=4534143" இலிருந்து மீள்விக்கப்பட்டது