முத்து ஆறு (சீனா)

ஆள்கூறுகள்: 22°46′N 113°38′E / 22.767°N 113.633°E / 22.767; 113.633
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


முத்து ஆறு
Pearl River
முத்து ஆறு கூமேன்
முத்து ஆற்றின் அமைப்பு மற்றும் இடங்கள் சீனா, வியட்நாம்
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
Countryசீனா, வியட்நாம்
Stateயுன்னான், குயிசூ, குவாங்ஷி, குவாங்டொங், ஆங்காங், மக்காவ், காவ் பாங் மாகாணம், லாங் சான் மாகாணம்
சிறப்புக்கூறுகள்
மூலம்அதன் துணை நதிகளின் பல்வேறு ஆதாரங்கள்
முகத்துவாரம்தென்சீனக் கடல்
 ⁃ அமைவு
மற்றும் குவாங்டொங்
நீளம்2,400 km (1,500 mi)[1]
வடிநில அளவு453,700 km2 (175,200 sq mi)[3]
வெளியேற்றம் 
 ⁃ சராசரி9,500 m3/s (340,000 cu ft/s)[2]

முத்து ஆறு (Pearl River) சீன மொழியில் ஜுஜியாங் ( சூ கியாங் ) என்றும் அழைக்கப்படுகிறது, முன்னர் இது கேன்டன் ஆறு Canton River. இந்த ஆறு தெற்கு சீனாவின் மிகப்பெரிய ஆறு ஆகும். குவாங்டாெங்கின் சி ஆறு ("மேற்கு"), பெய் ஆறு ("வடக்கு") மற்றும் டோங் ஆறு ("கிழக்கு") நதிகளின் நீர்நிலைகளுக்கு "முத்து ஆறு" என்ற பெயர் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆறுகள் அனைத்தும் முத்து ஆற்றின் துணை ஆறுகளாக கருதப்படுகிறது. ஏனெனில் அவை ஒரு பொதுவான ஆற்று முகத்துவாரங்களை கொண்டு முத்து ஆற்றுடன் பகிர்ந்து கொள்கின்றன. யாங்சி ஆறு மற்றும் மஞ்சள் ஆறுகளுக்கு அடுத்து, முத்து ஆறு சீனாவின் மூன்றாவது மிக நீளமான ஆறு ஆகும் 2,400 கிலோமீட்டர்கள் (1,500 mi). மற்றும் கொள்ளளவில் யாங்சிக்குப் பிறகு இரண்டாவது பெரியது 409,480-சதுர-கிலோமீட்டர் (158,100 sq mi). முத்து ஆற்று படுக்கை 珠江流域 ) லியாங்வாங்கின் ( குவாங்டாெங் மற்றும் குவாங்சி மாகாணங்கள்) பெரும்பான்மையையும், சீனாவில் யுன்னான், குய்சூ, ஹுனான் மற்றும் ஜியாங்சியின் சில பகுதிகளிலும் மற்றும் வியட்நாமின் வடகிழக்கு காவ் பாங் மற்றும் லாங் சான் மாகாணங்களின் வடக்கு பகுதிகளிலும் பாயும் ஆறு ஆகும்.

முத்து ஆறு மற்றும் கேன்டன் கோபுரம்

முத்து ஆற்றின் கரையோர நகரங்கள்[தொகு]

முத்து ஆற்றின் மேல் உள்ள பாலங்கள்[தொகு]

 • குவாங்சோ பாலம்
 • ஹையின் பாலம்
 • ஹைஷு பாலம்
 • ஆங்காங்-சூகாய்-மக்காவு பாலம்
 • ஹுவானன் பாலம்
 • ஹுமன் முத்து நதி பாலம்
 • ஹெடோங் பாலம்
 • ஹுவாங்பு பாலம்
 • ஜியாங்வான் பாலம்
 • ஜீஃபாங் பாலம்
 • பஜோ பாலம்
 • ரென்மின் பாலம்
 • ஷிஜியாங் சுரங்கம்
 • ஜிங்குங் பாலம்
 • யஜிஷா பாலம்

மேலும் காண்க[தொகு]

 • சீனாவில் உள்ள நதிகளின் பட்டியல்
 • சீனாவின் புவியியல்
 • சீனாவில் கப்பல் லிஃப்ட்
 • ஹாங்காங்கின் நதிகளின் பட்டியல்
 • முத்து நதி ஆதாரங்கள்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Encyclopædia Britannica: Yangtze River". Archived from the original on 2008-08-21. பார்க்கப்பட்ட நாள் 2013-03-08.
 2. "Chapter 5: Plate D-6 — GES DISC: Goddard Earth Sciences, Data & Information Services Center". Disc.sci.gsfc.nasa.gov. Archived from the original on 2013-02-03. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
 3. "珠江概况". 珠江水利网. Archived from the original on 2013-01-22. பார்க்கப்பட்ட நாள் 2013-03-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்து_ஆறு_(சீனா)&oldid=2955319" இலிருந்து மீள்விக்கப்பட்டது