முத்துலிங்க சுவாமிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்துலிங்க சுவாமிகள் என்பவர் ஈழத்துச் சித்தர்களுள் ஒருவராவார். தமிழ்நாட்டில் பதினெண் சித்தர் மரபு தோன்றி இருந்ததைப் போன்று ஈழத்திலும் சித்தர் மரபு ஒன்று தோற்றம் பெற்றிருந்தது. அது ஈழத்துச் சித்தர் பாரம்பரியம் எனப்படுகின்றது. அவ்வாறு தோன்றிய ஈழத்துச் சித்தர்களிலே முத்துலிங்க சுவாமிகளும் ஒருவராவார்.

இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சி நிலவியிருந்த பதினாறாம் நூற்றாண்டுகளில், வட இந்தியாவின் காஷ்மீர் பகுதியிலிருந்து கதிர்காமத்திற்கு வருகை தந்தவர் கல்யாணநாதர். இவரை கல்யாணகிரி என்றும் அழைப்பர்.

கதிர்காம முருகனைத் தரிசிக்கும் பொருட்டு மாணிக்க கங்கைக் கரையில் சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தின் போது வேட்டுவச் சிறுமி ஒருத்தியும், வேட்டுவச் சிறுவன் ஒருவனும் கல்யாணகிரி சுவாமிகளுக்கு குற்றவேல் புரிந்து வந்தனர். ஒருநாள் கல்யாணகிரியார் அசந்து துாங்கும் பொழுதில் வேட்டுவச் சிறுவன் அவரை எழுப்பிவிட கோபம் கொண்ட சுவாமிகள் வேட்டுவச் சிறுவர்களை சினந்து பேச சிறுவனும் எதிர்த்துப் பேசத் தொடங்கினான். இதனால் ஆத்திரம் கொண்டு சிறுவர்கைள துரத்திக் கொண்டு ஓடினார். மாணிக்ககங்கைக் கரையிேல அச் சிறுவர்கள் இருவரும் முருகனும் வள்ளியுமாகக் காட்சிதந்தனர்.

முருகனுக்கு வாழ்நாள் முழுவதும் பணிவிடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கதிர்காமத்திலேயே தங்கிவிட்ட கல்யாணகிரியார் முருகப் பெருமானது மந்திர எழுத்துக்கள் எழுதப்பட்ட பொன்னால் ஆன தகடு ஒன்றை செய்தார் என்றும், அந்த யந்திரமே தற்போதும் கதிர்காம கந்தனின் உற்சவ காலங்களில் பெட்டிக்குள் வைக்கப்பட்டு யானை மீது ஊர்வலமாக எடுத்துவரப் படுவதாக கூறுவர்.[1]

கல்யாணகிரி சுவாமிகள் கதிர்காமத்திலேய சமாதிநிலை அடைந்தார். அவர் சமாதியடைந்த போது அவரது பூதவுடல் முத்துப்போல் பிரகாசித்து சிவலிங்கம் போல் ஒடுங்கியதால் அடியாா்கள் இவரை "முத்துலிங்க சுவாமிகள்" என அழைத்தனர்.

இவரது சமாதி கதிா்காமத்தில் வள்ளியம்மன் கோவிக்குப் பக்கத்தில், மாணிக்ககங்கைக்கு அருகில் அமைந்துள்ளது. தற்போது இதுவே கதிர்காமச் சிவன் கோயிலாகக் காணப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துலிங்க_சுவாமிகள்&oldid=2166268" இலிருந்து மீள்விக்கப்பட்டது