முத்துரங்க முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முத்துரங்க முதலியார் என்பவர் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியிலுள்ள நாசரேத் பேட்டையைச் சேர்ந்த இந்திய விடுதலை போராட்டக்காரர். இவர் காமராசர் போன்றோரோடு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டவர்.[1] அதன் காரணமாக ஆகத்து 30, 1942 அன்று வி.வி.கிரி, காமராசர், சத்தியமூர்த்தி ஐயர் , சஞ்சீவ் ரெட்டி போன்றோரோடு மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார்.[2] 1946ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாணம் சட்டசபைக் காங்கிரசு கட்சித் தலைவர் பதவிக்கு டி.பிரகாசம் பெயரும், காமராசர் ஆதரவோடு முதலியாரின் பெயரும் முன்மொழியப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துரங்க_முதலியார்&oldid=2210838" இருந்து மீள்விக்கப்பட்டது