முத்துப்பேட்டை கண்டல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கண்டல்கள் உப்பைத் தாங்கவல்ல தாவரங்கள்; இவை பெரும்பாலும் வெப்ப மண்டல, மித வெப்ப மண்டலப் பகுதிகளில் கடலோரக் கழிமுகங்களில் காணப்படுகின்றன. இவை ஆழம் அதிகமில்லாத சதுப்பு நிலத்திலும் உவர்நீரிலும் வளரும் மரங்கள் அல்லது புதர்கள். வற்றுப்பெருக்க அலையின் வீச்சு, வண்டல் படிவு, உறைவிடப்பகுதி, இவற்றைத் தவிர களிமண்-பாங்கான அடித்தளம் உள்ள இடத்தில் தான் கண்டல்கள் வளர்வன என்பதால் மணற்பாங்கான அல்லது பாறைகள் நிறைந்த கரையில் இவை வளராது.