முத்துப்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முத்துப்பேட்டை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 17 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

முத்துப்பேட்டை (ஆங்கிலம்:Muthupet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இவ்வூரில் உள்ள சதுப்புநிலக் காடுகளுக்காகப் புகழ்பெற்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,313 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 47% ஆண்கள், 53% பெண்கள் ஆவார்கள். முத்துப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. முத்துப்பேட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அலுவலகங்கள்[தொகு]

இங்கு மொத்தம் 11 கல்விக்கூடங்கள், 15 மருத்துவமனைகள், 61 தெருக்கள், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி மன்ற அலுவலகம், சார்பதிவகம், பேருந்து நிலையம், காவல் நிலையம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், பேருந்து நிலையம், இரயில் நிலையம், வார சந்தை, அரசு பொது நூலகம், இணையதள மையங்கள், தொலை தொடர்பு அலுவலகம் உள்ளன.

தொழில்[தொகு]

முத்துப்பேட்டையின் பிரதானமாக தொழிலாக இருப்பது மீன் பிடிப்பதும், விவசாயம், தேங்காய் வியாபாரமுமாகும். முத்துப்பேட்டையிலிருந்து பல மாநிலங்களுக்குத் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சுற்றுலாமையம்[தொகு]

முத்துப்பேட்டையில் சதுப்பு நிலக்காடுகள் (லகூன்) அமைந்துள்ளது தனித்தனித்தீவுகளாக காட்சியளிப்பது முத்துப்பேட்டையின் சிறப்பம்சமாகும். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பலவகைப் பறவை இனங்கள் குறிப்பிட்ட சில காலங்களில் இங்கு வந்து தங்கி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது.

முத்துப்பேட்டை தர்கா[தொகு]

சுமார் எழுநூறு வருடங்கள் பழமை வாய்ந்த முத்துப்பேட்டை தர்காவிற்கு அனைத்து சமுதாய மக்களும் வருகை தருகின்றனர். பழம்பெருமை வாய்ந்த இந்த இடம், இஸ்லாமிய கட்டுமான முறைகளின்படி கட்டப்பட்டதாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள சமூக சம உரிமை, பாகுபாடின்மை ஆகியவற்றை வலியுறுத்திய ஹழரத் ஷைக் தாவூத் காமில் ஒலியுல்லாஹ் எனும் பெருந்தகையின் நினைவிடமாகும்.

அருகில் உள்ள சுற்றுலா தளங்கள்[தொகு]

70 கி.மீ. தொலைவில் தஞ்சாவூரும், 29 கி.மீ. தொலைவில் மல்லிபட்டினமும் தென் கிழக்கு முனையில் கோடியக்கரையும் சுற்றுலா தளங்களாக அமைந்துள்ளன.

நகர வளர்ச்சி[தொகு]

முத்துப்பேட்டையிலிருந்து சுமார் 125 கி.மீ. தொலைவில் திருச்சியில் பன்னாட்டு விமான நிலையமும், 340 கி.மீ. தொலைவில் சென்னை அண்ணா விமான நிலையமும் உள்ளன. முத்துப்பேட்டையிலிருந்து தமிழகம் முழவதும் இணைப்பு பேருந்துகள், இரயில்வே வசதியும் அமைந்துள்ளது. சிறந்த கல்வி அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டு ஆண், பெண் இருபாலருக்கும் பயனமையும் வகையில் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பொழுதுள்ள நிலையில் கல்வியின் வளர்ச்சி சற்று வளர்ச்சியடைந்துள்ளதை காண முடிகின்றது. "ஆவன்னா நேனா உதவி பெறும் துவக்கப் பள்ளி"தான் முத்துப்பேட்டையில் துவங்கப்பட்ட முதல் பள்ளிக்கூடமாகும். இப்பள்ளி சங்கத்து பள்ளிக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. முத்துப்பேட்டையில் சில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் இன்னும் இவ்வூரில் வாழ்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துப்பேட்டை&oldid=2430416" இருந்து மீள்விக்கப்பட்டது