முத்துநாயக்கன்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முத்துநாயக்கன் பட்டி
—  கிராமம்  —
முத்துநாயக்கன் பட்டி
இருப்பிடம்: முத்துநாயக்கன் பட்டி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°34′02″N 77°24′31″E / 10.567219°N 77.408692°E / 10.567219; 77.408692ஆள்கூற்று: 10°34′02″N 77°24′31″E / 10.567219°N 77.408692°E / 10.567219; 77.408692
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் மரு. T. G வினய் இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

முத்துநாயக்கன் பட்டி (MUTHUNAICKENPATTI) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்). [4][5] பழனி வருவாய் வட்டத்தின் மூன்றாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:3) ஆகும்.[6]

அமைவிடம்[தொகு]

பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வயலூரிலிருந்து சுமார் 7 கி.மீ.தூரம் வடக்கிலும், மடத்துக்குளத்தில் இருந்து 8 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 545 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் 2.5 கி.மீ தூரத்தில் மேற்கில் அமராவதி ஆறு ஓடுகிறது.[7]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,முத்துநாயக்கன் பட்டி கிராமத்தில் 619 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 2257 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.90%. இதில் 1120 பேர் ஆண்கள்; 1137 பேர் பெண்கள். இக்கிராத்தில் ஆரம்பப் பள்ளிகள் 4 மட்டுமே உள்ளது.[8]

முக்கிய பயிர்[தொகு]

இங்கு அமராவதி ஆற்றின் படுகைப் பகுதியில் உயர் ரக, ஒட்டுத் தென்னை அதிகம் உள்ளது. அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.

காற்றாலைகள்[தொகு]

பழனி வட்டம்த்தின் உயரமான மேட்டுப் பகுதியானதால் இங்கு அதிக எண்ணிக்கையில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

நிருவாக அமைப்பு[தொகு]

கிராமத்தின் தகவல்கள்[தொகு]

  • வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 577 முடிய
  • வருவாய்கிராமத்தின் பரப்பு : 1673.09.5 ஹெக்டேர்- (4134.30 ஏக்கர்)
  • வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
  • வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
  • வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
  • குக்கிராமங்களின் எண்ணிக்கை :


அடிக்குறிப்பு[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=13&centcode=0006&tlkname=palani#MAP
  5. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Thoppampatti&dcodenew=22&drdblknew=10
  6. திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண். 8. (ப.வெ. 509/ 2015/பி2, நாள்; 17.04.2015).
  7. http://wikimapia.org/#lang=ta&lat=10.567219&lon=77.408692 &z=16&m=w
  8. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துநாயக்கன்பட்டி&oldid=1884031" இருந்து மீள்விக்கப்பட்டது