முத்துத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முத்துத்தி
Pterocarpus santalinoides MS 4518.jpg
முத்துத்திப் பூக்கள், கொமோவே-லெராபா ஒதுக்ககம், புர்க்கினா ஃபாசோ
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
துணைக்குடும்பம்: Faboideae
சிற்றினம்: Dalbergieae
பேரினம்: ஒருசிறகி
இனம்: P. santalinoides
இருசொற் பெயரீடு
Pterocarpus santalinoides
தக.
வேறு பெயர்கள்

[1]
Lingoum esculentum (Schum. & Thonn.) Kuntze
Pterocarpus amazonicus Huber
Pterocarpus esculentus Schum. & Thonn.
Pterocarpus grandis Cowan
Pterocarpus michelii Cowan

முத்துத்தி (Pterocarpus santalinoides) எனப்படுவது நடுத்தர அளவிலான ஒருசிறகித் தாவர இனம் ஒன்றாகும்.[1]

முத்துத்தி மரங்கள் இரண்டு கண்டங்களில் வெகுவாகக் காணப்படுகின்றன. இவை மேற்கு ஆபிரிக்காவின் பெனின், புர்க்கினா ஃபாசோ, கமெரூன், கம்பியா, கானா, கினி, கினி-பிசாவு, ஐவரி கோஸ்ட், லைபீரியா, மாலி, நைஜீரியா, செனெகல், சியேரா லியோனி, தோகோ ஆகிய நாடுகளிலும் தென் அமெரிக்காவின் பிரேசில், கொலம்பியா, பிரெஞ்சு கயானா, கயானா, பரகுவை, பெரு, சுரினாம், டிரினிடாட் மற்றும் டொபாகோ, வெனிசுவேலா ஆகிய நாடுகளில் விரவிக் காணப்படுகின்றன.[2]

முத்துத்தி மரம் 9-12 மீ உயரம் வரை வளரும். படை படையான மேற்பட்டையைக் கொண்டிருக்கும் இதன் தண்டு ஒரு மீற்றர் விட்டம் வரை தடிக்கும். இறகுகள் போன்று 5-9 சீறிலைகள் ஒன்று சேர்ந்து இதன் இலையமைப்புக் காணப்படும். இதன் இலைகள் 10-20 செமீ நீளமானவை. செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் நிறம் கலந்த இதன் பூக்கள் கொத்துக் கொத்தாகக் காணப்படும். சிரட்டையுடன் கூடிய இதன் பழம் 3.5-6 செமீ நீளமாக இருக்கும். இதன் பழத்தின் ஒரு பக்கத்தில் பழத்தின் நீளத்தின் முக்கால்வாசி அளவான ஒற்றைச் சிறகு காணப்படும்.[3]

அடிக்குறிப்புக்கள்[தொகு]

  1. 1.0 1.1 ILDIS (2005)
  2. Prado (1998), ILDIS (2005)
  3. World Agroforestry Centre: Pterocarpus santalinoides

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துத்தி&oldid=2190960" இருந்து மீள்விக்கப்பட்டது