முத்துக்கமலம் (இணைய இதழ்)
![]() | இந்தக் கட்டுரை முத்துக்கமலம் (இணைய இதழ்) உடன் நெருக்கமானவரால் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.(பெப்ரவரி 2022) |
![]() | இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
முத்துக்கமலம் | |
---|---|
வெளியீட்டாளர் | தாமரைச்செல்வி |
இதழாசிரியர் | தேனி.எம்.சுப்பிரமணி |
வகை | இணைய இதழ் |
வெளியீட்டு சுழற்சி | மாதமிருமுறை |
முதல் இதழ் | 01-06-2006 |
நிறுவனம் | முத்துக்கமலம் இணைய இதழ் |
நகரம் | தேனி |
மாநிலம் | தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
தொடர்பு முகவரி | முத்துக்கமலம் இணைய இதழ் 19/1, சுகதேவ் தெரு, பழனிசெட்டிபட்டி தேனி - 635 531, தமிழ்நாடு, இந்தியா |
வலைப்பக்கம் | முத்துக்கமலம் இணைய இதழ் |
வளர்ந்து வரும் கணினி மற்றும் தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தில் இணையத்தின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இணைய இதழ்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. இவை அச்சில் வரும் இதழ்களைப் போன்று குறிப்பிட்ட வாசகர் எல்லைகள் எதுவுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள கணினி அறிவுத் திறன் பெற்றவர்களை வாசகர்களாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகில் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்த தமிழ் இணைய இதழ்கள் பல சுவையான செய்திகளைத் தந்து கொண்டிருக்கின்றன. இப்படித் தோன்றிய தமிழ் இணைய இதழ்களில் முத்துக்கமலம் இணைய இதழும் ஒன்று.
உள்ளடக்கம்[தொகு]
முத்துக்கமலம் இணைய இதழில்
- அறிவிப்புகள்
- ஆன்மீகம்
- பகுத்தறிவு
- பொன்மொழிகள்
- அடையாளம்
- நேர்காணல்
- கதை
- கட்டுரை
- கவிதை
- குட்டிக்கதை
- சிரிக்க சிரிக்க
- சிறுவர்பகுதி
- மகளிர்மட்டும்
- சமையலறை
- மனம் திறந்து
- புத்தகப்பார்வை
- கல்லூரி வாசல்
- குறுந்தகவல்
- மருத்துவம்
- கிறுக்குத்தனம்
- குறும்புகள்
- விவாதக்களம்
- தமிழ்வலைப்பூ
- சுவையான தகவல்கள்
- தினம் ஒரு தளம்
- ஜோதிடம்
என்று பல தலைப்புகளில் உள்ளடக்கங்களைக் கொண்டு பல்சுவை இணைய இதழாக இருக்கிறது.
வகைப்பாடு[தொகு]
முத்துக்கமலம் இணைய இதழ் பல தலைப்புகளைக் கொண்டு அனைத்து வகையான தகவல்களை வழங்கி வருவதால் உள்ளடக்கத்தின் அடிப்படையில் அது பல்சுவை இதழாகவும், அச்சு இதழ்கள் வெளியீட்டு முறைகளில் கால அளவுகளைப் பின்பற்றுவது போல் இணைய இதழ்கள் குறிப்பிட்ட கால அளவுகளில் புதுப்பிக்கப்படும் நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன. இதன் அடிப்படையில் மாதமிருமுறை (சுழற்சியில்) ஆங்கிலத் தேதிகள் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு[தொகு]
- தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தில் இருக்கும் சிறிய நகரான தேனியில் இருந்து 01-06-2006 முதல் நடத்தப்பெறும் இந்த இணைய இதழ் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களை வாசகர்களாகக் கொண்டுள்ளது.
- இதில் சிறப்புப் பகுதிகளாக பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண நாள் வாழ்த்துக்கள் , நினைவு அஞ்சலி போன்றவைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
- மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விஇயக்ககத்தில் தமிழ்த் துறையில் முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான சிறுகதைகள் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) படிப்பிற்காக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. முத்துக்கமலம் இணையவழிச் சிறுகதைகள் - மதிப்பீடுஎன்கிற தலைப்பில் மதுரை மாவட்டக் காவல்துறையில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த த.சுதந்திராதேவி (பதிவு எண்: A4C 6060007) என்பவர் திருச்சிராப்பள்ளி, லால்குடி, டாக்டர் கலைஞர் கலை அறிவியல் கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில்) விரிவுரையாளராகப் பணிபுரியும் முனைவர். துரை. மணிகண்டன் அவர்களை ஆய்வுக்கான நெறியாளராகக் கொண்டு ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளார்.
ஆய்விதழ்[தொகு]
இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் ஒன்றாக முத்துக்கமலம் இணைய இதழும் இடம் பெற்றிருக்கிறது.
வெளி இணைப்புகள்[தொகு]
- முத்துக்கமலம் இணைய இதழ் பரணிடப்பட்டது 2008-08-01 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் கம்ப்யூட்டர் (செப்டம்பர் 16- 30, 2007) இதழில் வெளியான முத்துக்கமலம் இணைய இதழ் பற்றிய செய்தி
- இந்தியா டுடே (நவம்பர் 7, 2012) இதழில் வெளியான முத்துக்கமலம் இணைய இதழைப் பற்றிய சிறு குறிப்பு
- இணைய இதழில் முத்துக்கமலம் (மணிவானதி வலைப்பூ)
- என்னை ஈர்த்த முத்துக்கமலம் (சிலம்புகள் வலைப்பூ)