முத்தாஹிதா குவாமி இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முத்தாகிதா குவாமி இயக்கம் (MQM), ( உருது: متحدہ قومی موومنٹ) (ஆங்கிலம் :Muttahida Qaumi Movement) என்பது பாக்கித்தானில் ஒரு மதச்சார்பற்ற அரசியல் கட்சியாகும், இது 1984 இல் அல்தாஃப் உசேன் என்பவரால் நிறுவப்பட்டது. தற்போது கட்சி 2 முக்கிய பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது. இதன் லண்டன் பிரிவை லண்டனைச் சேர்ந்த அல்தாஃப் உசேன் கட்டுப்படுத்துகிறார், இதன் பாகிஸ்தான் பிரிவு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட காலித் மக்பூல் சித்திகி நடத்தி வருகிறார். பட்டம் அதன் தேர்தல் சின்னமாகும்

இது 1978 ஆம் ஆண்டில் அல்தாஃப் உசேன் என்பவரால் ஆல் பாக்கித்தான் முஹாஜிர் மாணவர் அமைப்பு (APMSO) என்ற மாணவர் அமைப்பு ஒன்று நிறுவப்பட்டது. இது 1984 இல் முஹாஜிர் குவாமி இயக்கமாக உருவெடுத்தது.[1] 1997 ஆம் ஆண்டில், இந்த இயக்கம் முஹாஜிர் (நாட்டின் உருது மொழி பேசும் சமூகத்தினரிடையே கட்சி வேர்களைக் குறிக்கும்) என்ற வார்த்தையை அதன் பெயரிலிருந்து நீக்கி, அதற்கு பதிலாக முத்தாஹிதா ("ஒன்று சேர்க்கப்பட்ட") என்று மாற்றியது. இத இயக்கம் பொதுவாக கராச்சியில் வலுவான அணிதிரட்டும் திறனைக் கொண்ட ஒரு கட்சியாக அறியப்படுகிறது, பாரம்பரியமாக நகரத்தில் ஒரு அரசியல் சக்தியாக உள்ளது.[2][3]

1980 களின் பிற்பகுதியிலிருந்து (1988-1990, 1990-1992, 2002-2007, 2008-2013) ஒரு முக்கிய கூட்டணி பங்காளராக பாகிஸ்தானின் மத்திய அரசு மீது கட்சி தனது செல்வாக்கை வைத்திருக்கிறது.[4] இருப்பினும், கட்சி ஆதரவாளர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முத்தாஹிதா குவாமி இயக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிந்து தேசிய சட்டமன்றம், செனட் மற்றும் மாகாண சபையில் இருந்து விலகினர்.[5]

ஆகஸ்ட் 2016 இல், அல்தாஃப் உசேனின் ஆகஸ்ட் 22 உரையின் பின்னர், கட்சி மீது இராணுவத் தாக்குதல் தொடுக்கப்ப்பட்டது. மற்றும் அதன் அலுவலகமான நைன் ஜீரோ மூடப்பட்டு , ஃபாரூக் சத்தார் உள்ளிட்ட அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் முத்தாஹிதா குவாமி இயக்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்தாஃப் உசேனிடமிருந்து தங்களை ஒதுக்கி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனக்கு சொந்தமான கட்சியில் விதி மீறல் ஏற்பட்ட பிறகு ஃபாரூக் சத்தரின் கட்சி உறுப்பினர் பொறுப்பை முத்தாஹிதா குவாமி இயக்க நீக்கியது.[6]

பின்னணி[தொகு]

முஹாஜிர்கள் உருது மொழி பேசும் முஸ்லிம்கள், அவர்கள் 1947 இல் பிரித்தானிய இராச்சியத்திலிருந்து நாடு சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர். கராச்சி அப்போது உருது மற்றும் குஜராத்தி பேசும் புலம்பெயர்ந்தோர், பஞ்சாபியர்கள், பஷ்தூன்கள், பலூச் மற்றும் பல தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உள்ளிட்ட பலதரப்பட்ட இனங்களின் தாயகமாக இருந்தது. முஹாஜிர்கள் வர்த்தகம் மற்றும் அதிகாரத்துவத்தில் முன்னேறினர், ஆனால் பலர் இட ஒதுக்கீடு முறையை எதிர்த்தனர், இது பல்கலைக்கழக அனுமதி மற்றும் ஆட்சிப் பணிகளைப் பெறுவதில் சிந்திக்கு உதவியது..[7] இந்த இனப் போட்டிதான் முஹாஜிர் அரசியல் அணிதிரட்டலுக்கு வழிவகுத்தது, இது தேக்கமடைந்த பொருளாதாரம் மற்றும் பங்களாதேஷ் வதை முகாம்களில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானியர்கள் நிலை ஆகியவற்றால் மேலும் தூண்டப்பட்டது.

முஹாஜிர்களின் முதல் அரசியல் அமைப்பு, அனைத்து பாக்கித்தான் முஹாஜிர் மாணவர் அமைப்பு (APMSO) என அழைக்கப்படுகிறது, இது ஜூன் 11, 1978 அன்று கராச்சி பல்கலைக்கழகத்தில் அல்தாஃப் உசேன் என்பவரால் நிறுவப்பட்டது. மார்ச் 18, 1984 இல், இது ஒரு சரியான அரசியல் அமைப்பாக முஹாஜிர் குவாமி இயக்கம் என உருவானது.[1] கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் ஆட்சிப் பண்களில் வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு சில இனங்களுக்கு முன்னுரிமை அளித்த ஒதுக்கீட்டு முறையால் தங்களை பாகுபாடு மற்றும் அடக்குமுறைக்கு பலியாகக் கருதிய முஹாஜிர் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக இது தொடங்கப்பட்டது.[8]

குறிப்புகள்[தொகு]