முத்தாண்டி குப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்தாண்டிக்குப்பம் தமிழ் நாடு மாநிலம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் பேர்பெரியான்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட ஓர் சிற்றூராகும் இது நெய்வேலியில் இருந்து வடக்கே சுமார் மூன்று கி.மீ தூரத்திலும் பண்ருட்டியிலிருந்து தெற்கே சுமார் 16 கி.மீ தூரத்தில் உள்ளது. இப்பகுதி அரசு தொடர்பான சேவைகளுக்கும் மற்றும் பொதுதேவைக்காகவும் இதன் தாய் கிராமமான பேர்பெரியான்குப்பத்தை சார்ந்தே உள்ளது.

மக்கள்[தொகு]

இங்கு சுமார் 850 குடும்பங்கள் உள்ளன. வன்னியர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.[சான்று தேவை]

நீர் ஆதாரம்[தொகு]

இவ்வூர் மக்கள் அருகிலுள்ள பேர்பெரியான் குப்பம் கோயில் ஏரி நீரைத்தான் குடிக்கவும், சமைக்கவும் குளிக்கவும் பயன்படுத்தி வந்தனர். கழிவுகள் அதிகம் கலந்தமையால் நீர் கெட்டது. இந்திய விடுதலைக்குப்பின் ஊராட்சி ஒன்றியங்கள் ஆழ்துளை கிணறுகளை அமைத்து தூய குடிநீர் வழங்கியது. அதன்பின் அந்த ஏரி நீர் கால் நடைகளுக்கு குடி நீராகவும், முந்திரிக்கு பூச்சி மருந்து தெளிக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக, ஏரிக்கு அருகில் பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. அதனால் அந்த ஏரியைக்கோயில் ஏரி அழைக்கின்றனர்.

தொழில்[தொகு]

மக்கள் மானாவாரி பயிர்களான கம்பு, கேழ்வரகு, சோளம். வரகு, தினை, சாமை, உளுந்து, கொள்ளு, துவரை, எள்ளு ஆகியவற்றைப் பயிர் செய்து வந்தனர் .பணப்பயிரான முந்திரி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்ப்பித்தபின் முந்திரியில் லாபம் கண்டனர். அதனால் புன்செய் பயிர்களை விட்டு முந்திரி பயிர் செய்து வருகின்றனர். 2011 ல் வீசிய தானே புயல் முந்திரி மரங்களை வேருடன் பிடுங்கி எரிந்து விட்டது. மக்கள் முந்திரியில் பெரும் இழப்பைக்கண்டனர்.

சாலை வசதி[தொகு]

சென்னை - கும்பகோணம் 45C தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளுக்காரன் குட்டை என்ற இடத்திலிருந்து தொடங்கி ஒரு சாலை முத்தாண்டிக்குப்பம் வழியாக விருத்தாசலம் செல்கிறது. இந்த சாலைக்குக்கு வடபுறம் பேர்பெரியான் குப்பம் உள்ளது. மற்றொரு சாலை நெய்வேலி நகரத்திலிருந்து தொடங்கி முத்தாண்டிக் குப்பம் வழியாக பண்ருட்டி செல்கிறது.சாலைக்கு அருகில் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம் உள்ளது.

போக்குவரவு வசதி[தொகு]

நெய்வேலி நகரத்திலிருந்து முத்தாண்டிக்குப்பம் வழியாக பண்ருட்டிக்கு அரசு நகர பேருந்து செல்கிறது. வடலூரிலிருந்து முத்தாண்டிக்குப்பம் வழியாக அரசு நகர பேருந்து காட்டுக் கூடலூருக்குச் செல்கிறது.பண்ருட்டியிலிருந்து முத்தாண்டிக்குப்பம் வழியாக விருத்தாசலத்துக்கு ஒரு பேருந்து செல்கிறது.

கல்வி[தொகு]

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிப் பள்ளி ஒன்று உள்ளது. பேர்பெரியான் குப்பத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியும், அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியும் உள்ளது. முத்தாண்டிக்குப்பம் மாணவர்கள் அப்பள்ளிகளில் உயர்கல்வி பெருகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தாண்டி_குப்பம்&oldid=3235299" இலிருந்து மீள்விக்கப்பட்டது