முத்தம்பாளையம்
முத்தம்பாளையம்
Muthampalayam முத்தம்பாளையம் | |
---|---|
ஆள்கூறுகள்: 11°17′33″N 77°41′09″E / 11.292510°N 77.685874°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
ஏற்றம் | 232 m (761 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 638 112 |
தொலைபேசி குறியீடு | +91424xxxxxxx |
வாகனப் பதிவு | TN-56 yy xxxx |
அருகிலுள்ள ஊர்கள் | ஈரோடு, காசிபாளையம், அரங்கம்பாளையம், மூலப்பாளையம், மூலப்பட்டறை, முள்ளாம்பரப்பு மற்றும் கஸ்பாபேட்டை |
மாநகராட்சி | ஈரோடு மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | கிருஷ்ணன் உண்ணி |
மக்களவைத் தொகுதி | ஈரோடு மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | அ. கணேசமூர்த்தி |
சட்டமன்ற உறுப்பினர் | காலியிடம் |
இணையதளம் | https://erode.nic.in |
முத்தம்பாளையம் (ஆங்கில மொழி: Muthampalayam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 232 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள முத்தம்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°17′33″N 77°41′09″E / 11.292510°N 77.685874°E ஆகும். ஈரோடு, காசிபாளையம், அரங்கம்பாளையம், மூலப்பாளையம், மூலப்பட்டறை, முள்ளாம்பரப்பு மற்றும் கஸ்பாபேட்டை ஆகியவை முத்தம்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், முத்தம்பாளையம் பகுதியின் மொத்த மக்கள் தொகை 1,809 ஆகும்.[3]
ஈரோடு மாவட்டத்தில் குளத்துப்பண்ணை மற்றும் அசோகபுரி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருந்தோர்களுக்கு மாற்று ஏற்பாடுகளாக, முத்தம்பாளையத்தில், தமிழ்நாடு அரசால், ரூ.21.27 கோடியில் 256 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.[4]
இங்கு அமைந்துள்ள முத்தம்பாளையம் மாரியம்மன் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[5]
முத்தம்பாளையம் பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[6] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ India Director of Census Operations, Tamil Nadu (1972). District Census Handbook: Series 19: Tamil Nadu: A-B. Coimbatore (2 v. ) (in ஆங்கிலம்). Director of Stationery and Printing.
- ↑ Census of India, 1991: Pasumpon Muthuramalinga Thevar (pts. A & B) (in ஆங்கிலம்). Controller of Publications. 1994.
- ↑ "Muthampalayam Village Population - Erode - Erode, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
- ↑ தினத்தந்தி (2018-05-05). "ஈரோடு முத்தம்பாளையத்தில் ரூ.21 கோடி செலவில் 256 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
- ↑ "Arulmigu Mariamman Temple, Muthampalayam - 638009, Erode District [TM011943].,Mariyamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
- ↑ "Erode (West) Election Result 2021 Live Updates: Muthusamy S of DMK Wins". News18 (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.