முதுகெலும்பி தொல்லுயிரியல் மற்றும் தொல்மானிடவியல் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதுகெலும்பி தொல்லுயிரியல் மற்றும் தொல்மானிடவியல் நிறுவனம் (Institute of Vertebrate Paleontology and Paleoanthropology) சீனாவில் ஓர் ஆராய்ச்சி நிறுவனமாகவும் புதைபடிவங்களுக்கான சேகரிப்பு களஞ்சியமாகவும் திகழ்கிறது. இங்கு பல டைனோசர் மற்றும் பறக்கும் பல்லி மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பெயர் குறிப்பிடுவது போல இங்கு புவியியல் ஆராய்ச்சித் தலைப்புகளும் மனித வரலாற்றுக்கு முந்தைய காலங்கள் தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

சீனநாட்டின் பீகிங் நகரத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனம் சீன அறிவியல் அகாடமியின் கீழ் அதன் சொந்த நிறுவனமாக 1929 ஆம் ஆண்டில் செனோசோயிக் ஆராய்ச்சி ஆய்வகத்திலிருந்து வளர்ந்தது. இந்நிறுவனத்தின் பணியாளர்கள் 1986 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை சீனா-கனடா டைனோசர் திட்டத்தில் பங்கேற்று 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இயற்கை மற்றும் அறிவியல் சார்ந்த நாற்பத்தைந்து கட்டுரைகளை எழுதினார்கள். [1] சி.சி. யங் என்றும் அழைக்கப்படும் யாங் சோங்சியான், தோங் சிமிங்கு, மீமான் சாங்கு மற்றும் சாவோ சியிசின் ஆகியோர் குறிப்பிடதக்க சில தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர்களாவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Institute of Vertebrate Paleontology and Paleoanthropology, Chinese Academy of Sciences". பார்க்கப்பட்ட நாள் 2011-08-10.

புற இணைப்புகள்[தொகு]