முதுகலை டிப்ளமோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல்கலைக் கழக பட்டத்திற்குப் பிறகு படிப்பதன் மூலம் வழங்கப்படும் முதுகலை தகுதியே முதுகலை டிப்ளமோ ஆகும். இது பட்டப்படிப்பிற்கான டிப்ளமோவில் இருந்து வேறுபட்டது. முதுகலை டிப்ளமோ படிப்பினை ஆஸ்திரேலியா, வங்காளதேசம், பார்படோஸ், பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, ஜெர்மனி, ஹாங்காங்க், ஜமைக்கா, ஸ்பெயின், தென் ஆப்ரிக்கா, இந்தியா, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, நைஜிரியா, பிலிப்பைன்ஸ், போர்ச்சுக்கல், ரஷ்யா, இலங்கை, பாகிஸ்தான், போலந்து, சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஸ்வீடன், ஐக்கிய ராஜ்யம், டிரினிடாட் மற்றும் டோபகோ ஆகிய நாடுகள் வழங்குகின்றன.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து[தொகு]

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பல்கலைக்கழகங்கள் முதுகலை டிப்ளமோவினை மாணவர்களுக்கு வழங்குகின்றன. முதுகலை டிப்ளமோ சிறந்து விளங்கும் அளவிற்கான படிப்பினை குறிக்கிறது. இரண்டு ஆண்டு படிப்பில் முதல் ஆண்டு படிப்பு இதனைக் குறிக்கும். இதனைப் படிக்க பல்கலைக் கழக பட்டப்படிப்பு அவசியமானது, இருப்பினும் சில அரிதான நேரங்களில் மேம்பட்ட டிப்ளமோ படிப்பு போதுமானது.

இந்தியா[தொகு]

இந்தியாவில் பலவிதமான நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் முதுகலை டிப்ளமோ படிப்பினை வழங்குகின்றன. இப்படிப்பு நான்கு அரை வருடங்களைக் கொண்ட இரண்டாண்டுகளைக் கொண்டது. இது பயிற்சி, களப்பணி மற்றும் மதிப்புப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த படிப்பானது சிறப்பான முறையில் வேலை கிடைக்க மற்றும் தொழிற்சாலை வேலைகளுக்கு தயாராகும்படியான வேலை சார்ந்த படிப்புகளை வழங்குவது மற்றும் பயிற்சிகளை வழங்குவதை இலக்காகக் கொண்டது. ஒவ்வொரு தலைப்புகளிலும் ஆழமான கல்வியினை வழங்குதல், அறிவியல் கோட்பாடுகள், புதிய அணுகுமுறைகளின் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றினை சிறப்புற வழங்குவதற்கான நோக்கத்தில் படிப்புமுறை வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலாண்மையில் முதுகலை டிப்ளமோ, [1] தொழிற்சாலை பராமரிப்பு பொறியியல், மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம்,[2] தொலைதூர உணர்வு மற்றும் புவியியல் தகவல் அமைப்பு,[3] நிதி சந்தை, மனிதவள மேலாண்மை, சில்லரை மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல், சர்வதேச வணிக மேலாண்மை [4] போன்றவை இந்தியாவில் வழங்கப்படும் கல்வி பிரிவுகளில் சில உதாரணங்கள். இளங்கலைப் படிப்பு முடித்து தொழில்நுட்பத்தில் பிடிப்புகொள்வதற்கு விரும்புபவர்களுக்காகவும், முதுகலை படிப்பில் இடைக்கால அளவில் தொழில்நுட்பத்தில் ஆர்வம்கொள்வதற்கு விரும்புபவர்களுக்காகவும் இந்த முதுகலை டிப்ளமோ உதவுகிறது.

அயர்லாந்து[தொகு]

உயர் கல்வி மற்றும் பயிற்சி விருதுகளுக்கான அமைப்பு முதுகலை டிப்ளமோவினை வழங்கும். ஜூன் 2005 முதல் இந்த அமைப்பானது முதுகலை டிப்ளமோவினை அனுமதித்து வருகிறது.[5] அறிவியல், பொறியியல், மனிதநேயம் போன்ற பிரிவுகளின் கீழ் முதுகலை டிப்ளமோ வழங்கப்பட்டு வருகிறது. போதுமான இளங்கலைப் பட்டப்படிப்பு அல்லது அதற்கு நிகரான படிப்புகள் இருந்தால் மட்டுமே இப்படிப்பிற்கு அனுமதி வழங்கப்படுகிறது.[6] பல கல்வி நிறுவனங்கள் முன் அனுபவம் மற்றும் கற்றல் அங்கீகாரம் திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன. அதன்படி கல்வியில் போதுமான தகுதியில்லாதவர்கள் அவர்களின் வெளியீடுகள், கல்வி தொடர்பான களப்பணிகள் அல்லது ஆராய்ச்சி அனுபவங்களின் மூலம் கல்வி தொடர்பான நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு மேற்படிப்பினை மேற்கொள்ள இயலும்.[7]

போர்ச்சுக்கல்[தொகு]

போர்ச்சுக்கலில் முதுகலை டிப்ளமோ இரு சூழ்நிலைகளில் வழங்கப்படும். அவை: 1. சார்பற்ற படிப்பின் ஒருபகுதியாக படிக்கும்போது... 2. முதுகலை படிப்பின் முதலாமாண்டினை படித்து முடித்த பின்பு...[8][9]

சிங்கப்பூர்[தொகு]

சிங்கப்பூரில் இளங்கலை பட்டபடிப்பிற்கு பின்பு படிக்கும்படியான நிலையில் முதுகலை டிப்ளமோ உள்ளது. இது பட்டதாரி பள்ளி அல்லது பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகிறது. இதனை படித்து முடிக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி காலங்கள் ஆகும். இதில் அதிகப்படியான பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இங்கு, இளங்கலைப் படிப்பு முடித்தவர்கள் மட்டுமே முதுகலை டிப்ளமோ படித்து பட்டம் பெற முடியும். முதுகலை டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கல்வி அமைச்சகத்தில் (சிங்கப்பூர்) பதிவு செய்யப்பட்டு, தொழிற்சாலையினால் அங்கீகரிக்கப்படுவார்கள்..

ஸ்பெயின்[தொகு]

ஐரோப்பிய கடன் மாற்றம் மற்றும் திரட்சி அமைப்பின் மதிப்பீட்டு முறைகளைப் பின்பற்றுகின்ற ஸ்பெயின் நாட்டில், பல்வேறு விதமான ஸ்பெயின் பல்கலைக்கழகங்கள் முதுகலை டிப்ளமோ படிப்பினை வழங்குகின்றன.

உதாரணமாக பாப்லோ டி ஒலவிடே பல்கலைக்கழகம், சர்வதேச பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து ஆங்கில மொழியிலான முதுகலை டிப்ளமோ படிப்பினை, மனித உரிமைகள் மற்றும் சமூக ஆர்வலர்களையும் பாதுகாக்கும் குறிக்கோளுடன் இணைத்து செயலாற்றுகிறது. பாஸ்க் நாட்டின் பல்கலைக்கழகம் ஆங்கில மொழியிலான முதுகலை டிப்ளமோவினை சர்வதேச தேர்தல் கண்காணிப்பு மற்றும் தேர்தல் உதவியுடன் இணைத்து செயலாற்றுகிறது. இதில் பல அமைப்புகள் தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபடுகின்றன. இந்த அமைப்புகளில் தேர்தல் கழகங்களில் சர்வதேச அறக்கட்டளை (IFES), தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI), அமெரிக்க மாநிலங்களின் அமைப்பு (OAS) மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான OSCE அலுவலகம் (ODIHR) மற்றும் தேர்தல் சீர்திருத்த சர்வதேச சேவைகள் (ERIS) போன்றவை அடங்கும். [10]

இலங்கை[தொகு]

இலங்கையில், இளங்கலை பட்டத்திற்குப் பிறகு கல்வி முறைப்படியிலான மேற்படிப்பு முதுகலை டிப்ளமோ ஆகும்.

குறிப்புகள்[தொகு]

  1. https://www.iimcal.ac.in/programs/pgp
  2. http://www.cmeri.res.in/doc/PGDipAdvt2016.pdf
  3. Training Calendar http://www.iirs.gov.in/iirs/sites/default/files/pdf/Course_Calender_2016.pdf
  4. "Postgraduate Diploma". itm.edu. பார்த்த நாள் 24 May 2017.
  5. "NFQ" (en-GB).
  6. "Descriptors defining levels in the European Qualifications Framework (EQF) - Learning Opportunities and Qualifications in Europe - European Commission" (en).
  7. "Recognition of Prior Experiential Learning (RPEL) | NCI" (en-IE).
  8. See Article 10, Decree-Law no. 216/92 https://dre.pt/pdf1sdip/1992/10/236A00/47804785.pdf
  9. See Article 39, Decree-Law no. 115/2013 http://dre.pt/pdf1sdip/2013/08/15100/0474904772.pdf
  10. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுகலை_டிப்ளமோ&oldid=2293405" இருந்து மீள்விக்கப்பட்டது