முதியோர் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வயது அதிகமாக இருப்பவர்களை அவர்களது பிள்ளைகள் கைவிட்டுவிட்ட நிலையில் அல்லது பராமரிக்க முடியாத நிலையில் முதியோர்களுக்கு காப்பிடம் ஒன்று தேவையாக உள்ளது. இந்தக் காப்பிடங்களை அரசு அல்லது தனியார் தொண்டு நிறுவனங்கள் முதியோர் காப்பகம் அமைத்து வயதடைந்த முதியவர்களைப் பராமரிக்கும் பணிகளைச் செய்கின்றன. இந்த முதியோர் காப்பகங்களில் சில அரசின் நிதியுதவியுடன் கட்டணம் எதுவும் பெறாமல் செயல்படுகின்றன. சில மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு செயல்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதியோர்_காப்பகம்&oldid=698603" இலிருந்து மீள்விக்கப்பட்டது