முதியர்
Jump to navigation
Jump to search
முதியர் என்போர் சங்க காலக் குடிமக்கள். முதுமலைக் காட்டுப் பகுதியில் வாழ்ந்தமையால் இவர்கள் முதியர் எனப்பட்டனர்.
பல்யானைச் செல்கெழு குட்டுவன் இவர்களோடு நட்புறவு கொண்டு, அவர்களுக்குத் தன் நாட்டின் ஒரு பகுதியைப் பங்கிட்டுத் தந்து ஆளச் செய்தான். [1]
ஆண்டால் மூத்தவரை முதியவர் என்கிறோம். அறிவில் மூத்த பெரியவர்களைத் திருவள்ளுவர் முதுவர் என்கிறார். [2] ஆண்டில் மூத்தவரையும் இளையவரையும் குறிக்க ‘உறுவர்’. ‘சிறுவர்’ என்னும் சொற்கள் சங்க காலத்தில் வழக்கத்தில் இருந்தன. [3]
சிறுவர், இளையர், முதியர் என்னும் சொற்களையும் பருவ நிலைகளைக் குறிக்கச் சங்க கால நூல்கள் பயன்படுத்தியுள்ளன. [4]
இவற்றையும் காண்க[தொகு]
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ மதி உறழ் மரபின் முதியரைத் தழீஇக் கண்ணகன் மரபின் மண் வகுத்து ஈத்து பதிற்றுப்பத்து பதிகம் 3-4
- ↑ நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு – குறள் 715
- ↑ உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும் அறத்துறை அம்பி.புறம் 381
- ↑ அகம் 30-4, 233-8, 348-12, புறம் 254, நற்றிணை 207-7, பரிபாடல் 10-19, பதிற்றுப்பத்து 70-21, பெரும்பாணாற்றுப்படை 268