உள்ளடக்கத்துக்குச் செல்

முதல் மனிதன் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் மனிதன்
The First Man
முதல்பதிப்பின் அட்டை
நூலாசிரியர்அல்பேர்ட் காம்யு
உண்மையான தலைப்புLe Premier Homme
மொழிபெயர்ப்பாளர்ஆங்கிலத்தில்: டேவிட் ஹேப்குட்
தமிழில்:வெ. ஸ்ரீராம்
நாடுபிரான்சு
மொழிபிரெஞ்சு
வெளியீட்டாளர்எடிசியோன்ஸ் கல்லிமார்
வெளியிடப்பட்ட நாள்
1994
ஆங்கில வெளியீடு
1995
ISBN0-679-43937-4
OCLC31938033
843/.914 20
LC வகைPQ2605.A3734 P7413 1995

முதல் மனிதன் (The First Man, பிரான்சிய மொழி: Le Premier homme ) என்பது அல்பேர்ட் காம்யுனின் முடிக்கப்படாத இறுதி புதினமாகும்.

1960 சனவரி 4 அன்று, தனது நாற்பத்தாறாவது வயதில், காம்யு ஒரு மகிழுந்து விபத்தில் இறந்தார். காம்யு தனது மரணத்திற்கு முன்பு எழுதிக் கொண்டிருந்த சுயசரிதை புதினமாக தி ஃபர்ஸ்ட் மேன் நூலின் முழுமையற்ற கையெழுத்துப் பிரதி, விபத்து நடந்த இடத்தில் சேற்றில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் காம்யுனின் மகள் கேத்தரின் காம்யுன் அந்தக் கையெழுத்துப் பிரதியை தட்டச்சு செய்து, 1994 இல் நூலாக வெளியிட்டார். இதுவே அவரது தலைசிறந்த படைப்பாக அமையும் என்று கேத்தரின் நம்பினார். சில விமர்சகர்கள், இது முழுமையற்று இருந்தபோதிலும், அவரது கருத்துடன் உடன்பட்டனர். காம்யுவின் மற்ற புதினங்களின் நிதானமான தன்மையிலிருந்து மாறுபட்டு, இதில் காணப்படும் சிறுவயதின் உடல்ரீதியான சுறுசுறுப்பையும் கட்டுப்பாடற்ற உளவியலையும் அவர்கள் முக்கிய காரணமாகக் குறிப்பிட்டனர்.

கதைச் சுருக்கம்

[தொகு]

1913 இல் அல்சீரியாவில் ஒரு பனிக்காலத்தில் பிரசவ நேரத்தில் இருக்கும் மனைவியுடன் ஒரு இளம் கனவானின் குதிரை வண்டிப் பயணத்தில் இக்கதை துவங்குகிறது. வேலை நிமித்தமாக சொலபினோ என்ற சிற்றூருக்கு வரும் அந்த இளம் கனவானின் பெயர் ஹென்றி கோர்மேரி அவன் மனைவியின் பெயர் லூசி. அந்த சிற்றூருக்கு வந்து சேர்ந்த சிறிது நேரத்திலேயே லூசி, ழான் கோர்மெரி என்ற குழந்தையைப் பெற்றெருக்கிறாள். இந்தப் புதினம் ழான் கோர்மெரியின் பிறப்பு முதல் அல்ஜியர்சில் உள்ள லைசீ அல்லது மேல்நிலைப் பள்ளியில் அவன் படித்த ஆண்டுகள் வரையிலான பால்ய நினைவுகளும், தன் தந்தையைப் பற்றிய தேடலும், அவன் தாக்கம் பெற்ற மனிதர்களைப் பற்றிய என்னங்களுமே இப்புதினம். புதினத்தின் முதல் அத்தியாயம் 1913 இல் கதையின் நாயகனான ழான் கோர்மெரியின் பிறப்புடன் முடிவடைகிறது. அடுத்த அத்தியாயம் 1954 இல், நாயகனின் 41 வயதில் பிரான்ணில் துவங்குகிறது. நாயகனின் தந்தை அவனுக்கு ஒரு வயது இருக்கும்போது அவனையும், வாய் பேசமுடியாத அவனது தாயையும் தவிக்கவிட்டு பிரான்சில் நடந்த ஒரு போரில் இறந்ததை வாசகர்கள் அறிய முடிகிறது. தந்தை இறந்தது குறித்து அறிய தந்தையின் கல்லறைக்கு நாயகன் செல்கிறான். தன் தந்தை 29 வயதில் இறந்ததை கல்லறையில் படிக்கிறான். அது அவனை பெருமளவில் பாதிக்கிறது. 29 வயதில் இறந்துவிட்ட தன் தந்தையைவிட 41 வயதான தான், வயதானவன் என்று எண்ணுகிறான். அல்ஜீரியாவில் சொந்த ஊரில் வாழும் வாய் பேச முடியாத தன் தாயைக் காணச் செல்கிறான். ஊருக்கு வந்தவுடன் குழந்தைப் பருவம், பள்ளி நாட்கள் போன்ற நாயகனின் பால்ய நினைவுகள் மீதிக் கதையை ஆக்கிரமிக்கின்றன. இது ஒரு பரந்த ஆப்பிரிக்க நிலப்பரப்பில் குடியேறிய விருந்தோம்பல் அற்ற மக்களின் வரலாற்றைப் பற்றியது. ஒரு 'தாய்' நாட்டிற்கும் அதன் குடியேற்றவாசிகளுக்கும் இடையிலான சிக்கலான உறவைப் பற்றியது, அத்துடன் போர் மற்றும் அரசியல் புரட்சியின் நெருக்கமான விளைவுகளைப் பற்றியதுமாகும். [1]

கதாபாத்திரங்கள்

[தொகு]
  • ழான் கோர்மெரி – கதையின் கதாநாயகன். அவன் ஒரு ஏழைக் குடும்பத்தில் வளர்கிறான்.
  • கேத்தரின் கோர்மெரி – ஜாக்ஸின் தாய், அவர் "படிப்பறிவற்றவர், காது கேளாதவர்." ஜாக் அவரினம் அன்பாக இருக்கிறான். மேலும் தனது இளமைப் பருவத்தில் அவளைப் பார்க்கச் செல்கிறான்.
  • பியர் - ஜாக்ஸின் பால்ய நண்பன். அவன் ஜாக்குவசுடன் சேர்ந்து தொடக்கப் பள்ளியையும் உயர்நிலைப் பள்ளியையும் முடித்தான். [2]

திரைப்படத் தழுவல்

[தொகு]

இந்தப் புதினத்தைத் தழுவி, கியானி அமெலியோ இயக்கக்கத்தில், ஜாக்ஸ் கேம்ப்ளின் நடிப்பில், 2011 இல் திரைப்படம் வெளியானது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The First Man by Albert Camus - Reading Guide: 9780679768166 - PenguinRandomHouse.com: Books". PenguinRandomhouse.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-01-20.
  2. "The First Man by Albert Camus - Reading Guide: 9780679768166 - PenguinRandomHouse.com: Books". PenguinRandomhouse.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-01-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_மனிதன்_(புதினம்)&oldid=4486233" இலிருந்து மீள்விக்கப்பட்டது